பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலத்தில் உழவு செய்ய வேண்டுமா

Added : செப் 25, 2021
Share
Advertisement
கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் மதுரைசாமி தெரிவித்துள்ளதாவது:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்காக எட்டிமங்கலம், சூரப்பட்டி ஊராட்சிகள் தோட்டக்கலை துறைக்கும், சுக்காம்பட்டி, பாண்டாங்குடி, வலைசேரிபட்டி, தொந்திலிங்கபுரம்,சென்னகரம்பட்டி ஆகிய ஊராட்சிகள் வேளாண்மை துறைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இக்கிராமங்களில்

கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் மதுரைசாமி தெரிவித்துள்ளதாவது:கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்காக எட்டிமங்கலம், சூரப்பட்டி ஊராட்சிகள் தோட்டக்கலை துறைக்கும், சுக்காம்பட்டி, பாண்டாங்குடி, வலைசேரிபட்டி, தொந்திலிங்கபுரம்,சென்னகரம்பட்டி ஆகிய ஊராட்சிகள் வேளாண்மை துறைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இக்கிராமங்களில் நீண்ட காலமாக தரிசு நிலங்கள் வைத்திருப்பவர்களை கொண்டு உழவர் ஆர்வலர் குழு அமைக்கப்படும். தரிசு நிலத்தில் மண் மாதிரி சேகரித்து அதன்முடிவு அடிப்படையில் என்ன பயிர் சாகுபடி செய்யலாம் என குழு முடிவு செய்யும். பின்னர் விவசாயிகளின் பங்களிப்புடன் வேளாண்மைபொறியியல் துறை மூலம் முட்புதர் அகற்றி உழவு செய்து தரப்படும்.பொதுவான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து தரிசு நில தொகுப்பில்வரக்கூடிய அனைவரும் பயன் பெறும் வகையில் தெளிப்பு நீர் கருவி வழங்கப்படும். மேலும் விதை, இடுபொருட்கள் மானியத்தில்வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும்தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X