பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்.ஐ.,சிறப்பு ஒதுக்கீட்டில் சேர மருத்துவ மாணவர்களுக்கு வாய்ப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., 2021-22 ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கையில், இ.எஸ்.ஐ.,தொழிலாளர் வாரிசுகள் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை இ.எஸ்.ஐ., துணை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுவதும் 382 எம்.பி.பி.எஸ்., மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள், இ.எஸ்ஐ.,தொழிலாளர் வாரிசுகளுக்காக, இ.எஸ்.ஐ.சி.,கல்லுாரிகளில்

கோவை:எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., 2021-22 ஆம் ஆண்டின் மாணவர் சேர்க்கையில், இ.எஸ்.ஐ.,தொழிலாளர் வாரிசுகள் சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, கோவை இ.எஸ்.ஐ., துணை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:நாடு முழுவதும் 382 எம்.பி.பி.எஸ்., மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள், இ.எஸ்ஐ.,தொழிலாளர் வாரிசுகளுக்காக, இ.எஸ்.ஐ.சி.,கல்லுாரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு மற்றும் இச்சேர்க்கை விதிமுறைகளுக்கு தகுதி பெற்றிருப்பின், சிறப்பு ஒதுக்கீட்டிற்கு இ.எஸ்.ஐ.சி., மருத்துவம், பல் மருத்துவ கல்லுாரிகளில் விண்ணப்பிக்கலாம்.நீட் தரவரிசை பட்டி யல் மற்றும் இ.எஸ்.ஐ.சி.,வழங்கும் தகுதி சான்றிதழின் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை அமையும்.விண்ணப்பதாரர்கள் காப்பீட்டு நபர் வாரிசு சான்றிதழை பெற, இ.எஸ்.ஐ.சி., இணையதளத்தில் (www.esic.nic.in) கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.காப்பீட்டு நபர் வாரிசு சான்றிதழை ஆன்லைனில் பெற, 27ம் தேதி வரை கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இ.எஸ்.ஐ.சி., கிளை அலுவலகத்திற்கு விண்ணப்பத்தின் நகலை சமர்ப்பிக்க, வரும் 28 கடைசி தேதியாகும்.இச்சிறப்பு ஒதுக்கீடு சார்ந்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 2021-22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, தீர்ப்புக்கு உட்பட்டே நடைபெறும். விண்ணப்பங்கள் பெறுவதற்கும், மேலும் விபரங்களுக்கும் இ.எஸ்.ஐ.சி., இணையதளம் அல்லது கிளை அலுவலகத்தை அணுகவும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X