பெண் பலாத்கார கொலை வழக்கில் ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் பலாத்கார கொலை வழக்கில் ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

Added : செப் 25, 2021
Share
கோவை:பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், ஓட்டல் தொழிலாளிக்குஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.கோவை அருகேயுள்ள பூலுவபட்டி பகுதியை சேர்ந்த, கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 38 வயது பெண், வீட்டு வாடகை கொடுக்க முடியாததால், அங்குள்ள கோவில் மரத்தடியில் தங்கியிருந்தார். தினசரி கூலி வேலைக்கு சென்று, பொதுவெளியில் சமைத்து சாப்பிட்டு, அங்கேயே இரவில் துாங்குவது

கோவை:பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், ஓட்டல் தொழிலாளிக்குஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.கோவை அருகேயுள்ள பூலுவபட்டி பகுதியை சேர்ந்த, கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 38 வயது பெண், வீட்டு வாடகை கொடுக்க முடியாததால், அங்குள்ள கோவில் மரத்தடியில் தங்கியிருந்தார். தினசரி கூலி வேலைக்கு சென்று, பொதுவெளியில் சமைத்து சாப்பிட்டு, அங்கேயே இரவில் துாங்குவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2020, செப்., 18ல்,அகதிகள் முகாமில் வசித்து வந்த ஓட்டல் தொழிலாளி உதயகுமார்,40 இரவில் கல்பனா பொதுகழிப்பறைக்கு சென்ற போது, பின் தொடர்ந்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்தார். தப்பிக்க முயன்ற கல்பனாவை, தலையில் தாக்கி கொலை செய்தார்.ஆலாந்துறை போலீசார் விசாரித்து, உதயகுமாரை கைது செய்து, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி நந்தினிதேவி, உதயகுமாருக்கு ஆயுள்சிறை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X