தமிழ்நாடு

செப்.27ல் குலமங்கலத்தில் நெல் கொள்முதல் மையம் திறப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் மதுரை குலமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் மையம் செப்.,27 ல் திறக்கப்பட உள்ளது.குலமங்கலம் பகுதியில் தண்டலை 4வது கிளை வாய்க்கால் மூலம் குலமங்கலம், வடுகபட்டி, தண்டலை, காயாம்பட்டி, பூதக்குடி, லட்சுமிபுரம், எழும்பூர், பனங்காடியில் 400 ஏக்கரும் கிணற்றுப்பாசனம் மூலம் 100 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 100 ஏக்கரில் நெல்

மதுரை : நெல் அறுவடை பணிகள் துவங்கியுள்ள நிலையில் மதுரை குலமங்கலம் பகுதியில் நெல் கொள்முதல் மையம் செப்.,27 ல் திறக்கப்பட உள்ளது.

குலமங்கலம் பகுதியில் தண்டலை 4வது கிளை வாய்க்கால் மூலம் குலமங்கலம், வடுகபட்டி, தண்டலை, காயாம்பட்டி, பூதக்குடி, லட்சுமிபுரம், எழும்பூர், பனங்காடியில் 400 ஏக்கரும் கிணற்றுப்பாசனம் மூலம் 100 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 100 ஏக்கரில் நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெல் கொள்முதல் மையம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர்.பெரியாறு வைகை பாசன கோட்ட சங்கத் தலைவர் வெற்றிவேல் முருகன் கூறியதாவது:குலமங்கலம் கிராமத்தில் செப்.,15 முதல் யோகம் ரக நெல் அறுவடை நடந்து வருகிறது.

வெளிச்சந்தையில் 67 கிலோ மூடை ரூ.800 - 900க்கு விற்கப்படுகிறது. அதே மூடை அரசு கொள்முதல் மையத்தில் ரூ.1300 க்கு விலை போகிறது. நெல் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வெளியில் விற்பதன் மூலம் மூடைக்கு ரூ.400 வீதம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏக்கருக்கு ரூ.14 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் மையம் திறக்காததால் இடைத்தரகர்களுக்கு சாதகமாகி விடுகிறது. மையம் திறக்கக்கோரி நேரில் மனு கொடுத்தும் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் நஷ்டத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நெல் கொள் முதல் மையம் திறக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தியிடம் கேட்டபோது,'' நெல் கொள்முதல் மையம் அமைப்பதற்கான உபகரணங்கள் வாங்க கால அவகாசம் தேவைப்படுகிறது. செப்.,27ல் குலமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நெல் கொள்முதல் மையம் அமைக்கப்படும் என்றார்.

அமைச்சர் எச்சரிக்கை

அரும்பனுாரில் கூட்டுறவுத்துறையின் நேரடி கொள்முதல் மையத்தை துவக்கி அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:நெல் விளையுமிடங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. இடைத்தரகர்களிடமிருந்து நெல்கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் ஈரப்பதத்துடன் நெல் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். அத்தகைய நெல்லை கடந்த ஆட்சி காலத்தில் கொள்முதல் செய்ததால் பழுப்பு நிற அரிசியை ரேஷனில் விநியோகிக்க நேர்ந்தது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X