பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் ஏ.டி.எம்., களில் இனி எப்போதும் பணம்!

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை:வாடிக்கையாளரின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஏ.டி.எம்., களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் என, அஞ்சல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு ஏ.டி.எம்.,-ல் ஒரு மாதத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அந்த ஏ.டி.எம்.ஏற்கு, ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ., சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த விதியானது, அக்.,1ம்

கோவை:வாடிக்கையாளரின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் ஏ.டி.எம்., களில் போதிய பண இருப்பை உறுதி செய்ய வேண்டும் என, அஞ்சல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு ஏ.டி.எம்.,-ல் ஒரு மாதத்தில், 10 மணி நேரத்திற்கும் மேலாக பணம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அந்த ஏ.டி.எம்.ஏற்கு, ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்.பி.ஐ., சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த விதியானது, அக்.,1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.இதை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளரின் சிரமத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து அஞ்சல் நிலையங்களும், நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் தங்கள் ஏ.டி.எம்., களில் பணம் நிரப்பப்படுவதை கண்காணிக்க வேண்டும் என அஞ்சல் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.இதேபோல், போதிய செக்யூரிட்டி வசதி இல்லாததால், அஞ்சல் துறை ஏ.டி.எம்., களில் கடந்த, மூன்றுஆண்டுகளில் கொள்ளை முயற்சி சம்பவங்களும்அதிகரித்துள்ளன.அனைத்து அஞ்சல் துறை ஏ.டி.எம்., மையங்களிலும் தவறாமல், செக்யூரிட்டிகளை பணியமர்த்த வேண்டும் என, அஞ்சல் இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X