பொது செய்தி

தமிழ்நாடு

உள்நாட்டு தொழில்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்: ஏற்றுமதியாளர்களுக்கான கருத்தரங்கில் தகவல்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;உள்நாட்டு தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில், வர்த்தக, வணிக வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின்,
 உள்நாட்டு தொழில்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம்: ஏற்றுமதியாளர்களுக்கான கருத்தரங்கில் தகவல்

கோவை;உள்நாட்டு தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில், வர்த்தக, வணிக வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சகத்தின், வெளிநாட்டு வர்த்தக இணை இயக்குனர் அலுவலகம் மற்றும் கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில், ஏற்றுமதியாளர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நேற்று நடந்தது.கோவை வெளிநாட்டு வர்த்தகத் துறை இணை இயக்குனர் ஸ்ரீதர் பேசியதாவது:ஏற்றுமதியை மேம்படுத்துதல், ஏற்றுமதி பன்முகப்படுத்துதல், என்ற இரு அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தில், என்ன வளம் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்றார் போல் தொழில் வளத்தை பெருக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் தென்னை நார் மூலம் பல்வேறு தொழில்கள் நடக்கின்றன.
அவற்றை முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு தொழில்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு, ஏற்றுமதிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கோவை எம்.பி., நடராஜன், கலெக்டர் சமீரன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர்(பொறுப்பு) சண்முகசிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கருத்தரங்கில், ஏற்றுமதி நிறுவனங்கள் சார்பில், 27 அரங்குகளில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஏற்றுமதி குறித்த ஆலோசனைகள், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், திட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X