பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்தி: விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

Added : செப் 25, 2021
Share
Advertisement
முளைப்புத்திறன் குறைந்த மற்றும் காலாவதியான விதைகள் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்க, விதை ஆய்வுத்துறையினர், கடைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பருவமழை துவங்கவுள்ள நிலையில், பல்வேறு பயிர்களின் விதைகளை விவசாயிகள் கொள்முதல் செய்வர். முளைப்புத்திறன் குறைந்த விதைகளால், மகசூல் பாதிக்கப்படும். விவசாயிகள் இழப்பைச்

முளைப்புத்திறன் குறைந்த மற்றும் காலாவதியான விதைகள் விற்பனை செய்யப்படுவதை தவிர்க்க, விதை ஆய்வுத்துறையினர், கடைகளில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமழை துவங்கவுள்ள நிலையில், பல்வேறு பயிர்களின் விதைகளை விவசாயிகள் கொள்முதல் செய்வர். முளைப்புத்திறன் குறைந்த விதைகளால், மகசூல் பாதிக்கப்படும். விவசாயிகள் இழப்பைச் சந்திப்பர்.எனவே, விதை விற்பனை உரிமம் பெற்ற கடைகளில் விதைச்சான்றுத் துறையினர் திடீர் ஆய்வு நடத்தி, விதைகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். உரிமம் பெறாத கடைகளில் விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களப்பணியில் கைகோக்க அழைப்பு
நாளை உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், வெள்ளலுார் குளக்கரையில் பல்லுயிர் பூங்கா பராமரிப்புக்கு, தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.காலை 7 -8.30 மணி வரை, பல்லுயிர் பூங்கா பராமரிப்பு களப்பணி நடக்கிறது. தொடர்ந்து, 'நொய்யல் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில், வரலாற்று ஆர்வலர் இளங்கோவனின் அனுபவப் பகிர்வு நடக்கிறது. இதில், இணைந்து கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X