பொது செய்தி

தமிழ்நாடு

உண்மையை மறைத்து பொதுநல வழக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மதுரை : கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உண்மையை மறைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை பழைய விளாங்குடி முத்துராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: பழைய விளாங்குடியில் பரம்பரை மணியக்காரராக உள்ளேன். வைகை ஆற்றின் வடகரை ஓரத்தில் குறிப்பிட்ட சர்வே

மதுரை : கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உண்மையை மறைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை பழைய விளாங்குடி முத்துராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: பழைய விளாங்குடியில் பரம்பரை மணியக்காரராக உள்ளேன். வைகை ஆற்றின் வடகரை ஓரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் பழமையான வெள்ளைப் பிள்ளையார் கோயில் உள்ளது.கோயில் நிலத்தை சிலர் ஆக்கிரமித்தனர். கோயிலை இடித்தனர். எங்களை மிரட்டினர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலை மீண்டும் கட்ட வேண்டும். மக்கள் வழிபட ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், வடக்கு தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துராஜா குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு: ஆக்கிரமிப்பு பிரச்னையில் மனுதாரர் உட்பட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கோயில் நிலம் தொடர்பாக டி.ஆர்.ஓ.,விசாரணை நிலுவையில் உள்ளது. உண்மையை மறைத்து மனுதாரர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரிவித்தது.நீதிபதிகள்: இதை பொதுநல வழக்காக கருத முடியாது. தனிநபர் நலன் சார்ந்தது. மனுவை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம். தொகையை தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X