பொது செய்தி

தமிழ்நாடு

நிலம் அளவீடு செய்யாமல் குளக்கரையில் கற்கள் பதிப்பு: தமிழக அரசை ஏமாற்றும் பொதுப்பணித்துறை!

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்காமல், புதிதாக கரை உருவாக்கி, கான்கிரீட் கற்கள் பதிக்கும் வேலையை, பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது.நொய்யல் ஆறு சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தில், ரூ.230 கோடியில், குளங்களின் கரைகளை பலப்படுத்தி, கான்கிரீட் கற்கள் பதிப்பது, நீர் வழங்கு வாய்க்கால் புதுப்பிப்பது உள்ளிட்ட வேலைகளை,
 நிலம் அளவீடு செய்யாமல் குளக்கரையில் கற்கள் பதிப்பு: தமிழக அரசை ஏமாற்றும் பொதுப்பணித்துறை!

கோவை;பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்காமல், புதிதாக கரை உருவாக்கி, கான்கிரீட் கற்கள் பதிக்கும் வேலையை, பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது.நொய்யல் ஆறு சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தில், ரூ.230 கோடியில், குளங்களின் கரைகளை பலப்படுத்தி, கான்கிரீட் கற்கள் பதிப்பது, நீர் வழங்கு வாய்க்கால் புதுப்பிப்பது உள்ளிட்ட வேலைகளை, பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது.கான்கிரீட் கற்கள் பதிப்பதால், பல்லுயிர் பெருக்கச் சூழல் பாதிப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

தி.மு.க., சுற்றுச்சூழல் அணியினரும், அரசின் கவனத்துக்கு இப்பிரச்னையை, நேரடியாக கொண்டு சென்றனர். இதைப்பற்றி கவலைப்படாமல், அப்பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்கின்றனர்.இதில், பேரூர் சுண்டக்காமுத்துார் குளம், 265 ஏக்கர் பரப்பு கொண்டது. 1,350 மீட்டர் நீளத்துக்கு கரை அமைந்திருக்க வேண்டும். குளத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் ஆக்கிரமித்து, கரும்பு, வாழை, தென்னை பயரிட்டு, சொட்டு நீர் பாசனம் செய்திருக்கின்றனர்.100க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், குளத்தில் நீர்த்தேக்கும் பரப்பு சுருங்கியிருக்கிறது. கரையை பலப்படுத்தி, கற்கள் பதிப்பதற்கு முன், நில அளவைத்துறை வசமுள்ள, புல வரைபடத்தின் அடிப்படையில் நில அளவீடு செய்ய வேண்டும்; ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டுமென, விவசாயிகளில் ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.
ஆனால், பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்யாமல், அளவீடு செய்தது போல் கணக்கு காட்டுவதற்காக, ஆங்காங்கே கற்களை நட்டு, ஊதா நிற வர்ணம் பூசியிருக்கின்றனர்.ஆக்கிரமிப்பை அகற்றி, நிலங்களை மீட்காமல், குளத்துக்குள், கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டி, புதிதாக கரை உருவாக்கி, கற்கள் பதிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.இது தவிர, பேரூர் பேரூராட்சியில் உற்பத்தியாகும் கழிவு நீர் நேரடியாக, குளத்தில் சேகரமாகும் வகையில், கான்கிரீட் கால்வாய் கட்டப்பட்டிருக்கிறது. இப்பணி துவங்கும்போது, சுத்திகரிப்பு நிலையம் கட்டி, கழிவு நீரை சுத்திகரித்து அனுப்புவதாக, பேரூராட்சி நிர்வாகம் உறுதியளித்ததால், மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது.அவ்வாறு செய்யாமல் நேரடியாக கழிவு நீர் கலக்கிறது. அதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால், 'இன்னும், 10 நாட்களுக்குள் நில அளவையரை வரவழைத்து, மீண்டும் நில அளவீடு செய்வோம்' என, சொத்தை காரணம் கூறுகின்றனர்.அவர்கள் கூறுகையில், 'குளத்துக்குள் விவசாயம் செய்வது உண்மையே; 100 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருக்க வாய்ப்பில்லை; 10 ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கலாம். பேரூர் கிராமத்தில் நில அளவீடு செய்து, கற்கள் நட்டுள்ளோம். சுண்டக்காமுத்துார் கிராமத்தில் இன்னும் அளவீடு செய்யவில்லை.
நில அளவையரை அழைத்துள்ளோம்; மீண்டும் அளவீடு செய்வோம்' என்றனர்.ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, புதிதாக கரை உருவாக்கப்பட்டு, கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்விஷயத்தில், தமிழக அரசின் கவனத்துக்கு உண்மை நிலவரத்தைச் சொல்லாமல், ஏமாற்றும் வேலையை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X