பொது செய்தி

தமிழ்நாடு

இரவில் ஒட்டும் போஸ்டர்... பகலில் 'டர்ர்...!' சென்னை போல் நடவடிக்கை எடுத்தால் ஜோர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
கோவை;உக்கடம் மேம்பாலத்தின் துாண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழிக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கோவை நகர் பகுதியில் புதிதாக கட்டப்படும் பாலங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டும் கலாசாரம் அதிகரித்துள்ளது. உக்கடம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் தற்போது கட்டப்படும் பாலங்களின் துாண்களில், அரசியல்
 இரவில் ஒட்டும் போஸ்டர்... பகலில் 'டர்ர்...!' சென்னை போல் நடவடிக்கை எடுத்தால் ஜோர்

கோவை;உக்கடம் மேம்பாலத்தின் துாண்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கிழிக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.கோவை நகர் பகுதியில் புதிதாக கட்டப்படும் பாலங்கள் மற்றும் அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டும் கலாசாரம் அதிகரித்துள்ளது. உக்கடம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோட்டில் தற்போது கட்டப்படும் பாலங்களின் துாண்களில், அரசியல் கட்சியினரின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இது, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி வருகிறது.சென்னை மாநகராட்சி பகுதியில், இதுபோல் ஒட்டப்பட்ட போஸ்டர்களை, மாநகராட்சி ஊழியர்கள் கிழித்தெறிந்து, 'கிளீன் சிட்டி'யாக மாற்றினர். அது போன்ற துரித நடவடிக்கை, கோவையிலும் வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.உக்கடம் - ஆத்துப்பாலம் வரை கட்டப்படும் பாலத்தில், ஒட்டியுள்ள போஸ்டர்களை கிழிக்கும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
அத்துறையினர் கூறுகையில், 'பாலம் துாண்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை தொடர்ந்து கிழிக்கிறோம். இரவோடு இரவாக மீண்டும் ஒட்டி விடுகின்றனர். அதன் மீது தண்ணீர் ஊற்றி, ஊற வைத்து, கிழிப்பதற்கு ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். போலீசிலும் புகார் கொடுத்திருக்கிறோம்.ரோந்து செல்லும் போலீசார் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து, அரசு சுவர்கள் மற்றும் கட்டுமானங்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுத்தால், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X