பொது செய்தி

தமிழ்நாடு

இந்திரா நகரில் நெரிசலை குறைக்க 'யு' வடிவ மேம்பாலங்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை : போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓ.எம்.ஆரில், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில், 108 கோடி ரூபாயில் இரண்டு, 'யு' வடிவ மேம்பாலங்கள் கட்டும் பணி துரித கதியில் நடந்து வருகிறது. உதவும்சென்னையின் முக்கிய சாலையாக ஓ.எம்.ஆர்., உள்ளது.போக்குவரத்து நெரிசலை குறைக்க, டைடல் பார்க் சிக்னல் மற்றும் இந்திரா நகர் சிக்னல் ஆகிய இடத்தில் 'யு' வடிவ, மேம்பாலம் அமைக்க

சென்னை : போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஓ.எம்.ஆரில், டைடல் பார்க் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில், 108 கோடி ரூபாயில் இரண்டு, 'யு' வடிவ மேம்பாலங்கள் கட்டும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.


உதவும்


சென்னையின் முக்கிய சாலையாக ஓ.எம்.ஆர்., உள்ளது.போக்குவரத்து நெரிசலை குறைக்க, டைடல் பார்க் சிக்னல் மற்றும் இந்திரா நகர் சிக்னல் ஆகிய இடத்தில் 'யு' வடிவ, மேம்பாலம் அமைக்க சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டது.

இதற்காக 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்க இடையூறாக நின்ற 35 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடப்பட்டன.டைடல் பார்க் சந்திப்பில், இந்திரா நகர் சிக்னல் மற்றும் திருவான்மியூரில் இருந்து சி.எஸ்.ஐ.ஆர்., சாலை செல்ல, 2,000 அடி நீளம், 30 முதல் 40 அடி அகலம் வரை கொண்ட ஒரு பாலம் கட்டப்படுகிறது.

இந்திரா நகர் சிக்னலில் இருந்து செல்லும் வாகனங்கள், டைடல் பார்க் சிக்னலில் 'யு' டர்ன் செய்து மீண்டும் இந்திராநகர் நோக்கி செல்லும் வகையில் 1,000 அடி நீளம், 30 அடி அகலத்தில் மற்றொரு மேம்பாலம் அமைகிறது.இரு பாலமும், ஒன்றோடு ஒன்று இணைத்து கட்டப்படுகிறது. அதே போல், இந்திரா நகர் சிக்னல் அருகில் 1,000 அடி நீளம், 30 அடி அகலத்தில் மற்றொரு, 'யு' வடிவ மேம்பாலம் கட்டப்படுகிறது.

டைடல்பார்க் சந்திப்பில் இருந்து, இந்திரா நகர் வழியாக, அடையாறு செல்ல மற்றும் தரமணி, களிக்குன்றம் பகுதிமக்கள் ஓ.எம்.ஆரில், இதர பகுதிகளுக்கு செல்ல இந்த மேம்பாலம் உதவும்.


நடவடிக்கை


மேம்பாலப் பணி முடிந்ததும், இந்திரா நகர் சிக்னலை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இரண்டு மேம்பால பணிகள் முடிந்ததும், டைடல் பார்க், இந்திராநகர் சந்திப்பில், வாகன நெரிசல் கணிசமாக குறையும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளதால், இரண்டு மேம்பால பணிகளும் இரவு பகலாக நடக்கின்றன.தற்போது 50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு மேம்பாலங்களையும் திறக்க, மாநில சாலை மேம்பாட்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X