சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமறைவு குற்றவாளிகள் கைது

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்;தமிழகத்தில் கடந்த சில நாட்களில் நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் பயங்கரமான முறையில் கொலை நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதுாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் 'குளோஸ் வாட்சிங்' முறையில் கண்காணிக்க

திருப்பூர்;தமிழகத்தில் கடந்த சில நாட்களில் நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் பயங்கரமான முறையில் கொலை நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலைதுாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் 'குளோஸ் வாட்சிங்' முறையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் உள்ளவர்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து, திருப்பூர் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு விடியவிடிய மாவட்டம் முழுவதும் நுாற்றுக்கணக்கான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட நபர்களின் நடவடிக்கைகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
தலைமறைவு குற்றவாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 45 பேரிடம் நன்னடத்தை உறுதி சான்றிதழும் பெறப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள மதுக்கடை பார்கள், தங்கும் விடுதிகள், குற்ற சம்பவ நபர்கள் தொடர்புடைய வீடு என, 300க்கும் மேற்பட்ட இடங்களில் விடிய விடிய போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆயிரக்கணக்கான வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X