சாலை, காலி மனைகளில் மழை நீர் தேக்கம்; பொழிச்சலூரில் டெங்கு பரவும் அபாயம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பம்மல் : பொழிச்சலுார் ஊராட்சியில், சாலைகளிலும், காலி மனைகளிலும் மழை நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பம்மலை அடுத்த பொழிச்சலுார் ஊராட்சியில், பல இடங்களில் மழை நீர் கால்வாய் இல்லை. அதே போல், காலி மனைகளும் அதிகளவில் உள்ளன.இதனால், லேசான மழை பெய்தாலே, பல சாலைகளில் குட்டை போல் மழை நீர் தேங்குகிறது. அதே போல், காலி

பம்மல் : பொழிச்சலுார் ஊராட்சியில், சாலைகளிலும், காலி மனைகளிலும் மழை நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பம்மலை அடுத்த பொழிச்சலுார் ஊராட்சியில், பல இடங்களில் மழை நீர் கால்வாய் இல்லை. அதே போல், காலி மனைகளும் அதிகளவில் உள்ளன.இதனால், லேசான மழை பெய்தாலே, பல சாலைகளில் குட்டை போல் மழை நீர் தேங்குகிறது. அதே போல், காலி மனைகளிலும் குளம்போல் தண்ணீர் தேங்கி பச்சை நிறமாக மாறிவிட்டது.பல நாட்களாக இப்படி இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு தேங்கும் பகுதி யில் துர்நாற்றம், கொசு தொல்லை அதிகரித்து உள்ளது.

இது குறித்து, பல முறை புகார் அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துஉள்ளனர்.இதனால், இவ்வூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காய்ச்சல் பரவும் முன், மழைநீரை வெளியேற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X