பொது செய்தி

தமிழ்நாடு

தாய்மை என்பது கடவுளின் வரப்பிரசாதம்! சமுதாய வளைகாப்பு விழாவில் நெகிழ்ச்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில் திருமண மண்டபம் ஒன்றில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மரகதம் தலைமை வகித்தார். வட்டார அலுவலர் ஜெயலதா, மருத்துவர்கள் கிருத்திகா, மற்றும் அபுதாகீர் பாஷா, ரோட்டரி சங்க நிர்வாகி சதாசிவம் முன்னிலை வகித்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:பெண் ஒருவர் கருத்தரித்து, தாய்மை பேறு அடைவது கடவுள்
 தாய்மை என்பது கடவுளின் வரப்பிரசாதம்! சமுதாய வளைகாப்பு விழாவில் நெகிழ்ச்சி

பல்லடம்:பல்லடத்தில் திருமண மண்டபம் ஒன்றில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் மரகதம் தலைமை வகித்தார். வட்டார அலுவலர் ஜெயலதா, மருத்துவர்கள் கிருத்திகா, மற்றும் அபுதாகீர் பாஷா, ரோட்டரி சங்க நிர்வாகி சதாசிவம் முன்னிலை வகித்தனர்.வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி பேசியதாவது:பெண் ஒருவர் கருத்தரித்து, தாய்மை பேறு அடைவது கடவுள் வழங்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். இன்று, 50 சதவீதம் பேருக்கு கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.பேரிச்சை, மாதுளை உள்ளிட்ட பழங்கள், மற்றும் கீரைகள் ஆகியவற்றை தவறாமல் சேர்க்க வேண்டும். ரத்த ஓட்டம் சீராக இருக்க இடது பக்கம் திரும்பி படுக்க வேண்டும்.நல்லதையே நினைத்து, பார்த்து, பேசி வந்தால் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் அறிவுடனும் பிறக்கும். கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது என்பதால், 24 மணி நேரமும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கர்ப்பிணிகளுக்கு, புடவை, வளையல், தட்டு, பாத்திரம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டசீர்வரிசைகள் வழங்கப்பட்டன. முன்னதாக நடந்த வினாடி வினா நிகழ்ச்சியில், கரைப்புதூர் சேர்ந்த கிருத்திகா முதல் பரிசு, மேற்கு பல்லடம் அகிலாண்டேஸ்வரி இரண்டாம் பரிசு மற்றும் பாரதிபுரத்தை சேர்ந்த தனலட்சுமி மூன்றாம் பரிசு பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X