பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்களை பாதுகாக்க கையெழுத்து இயக்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
காசிமேடு : காசிமேடில் மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடந்தது.சென்னை காசிமேடில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மீனவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், தேசிய கடல் மீன் வள மசோதா 2021வை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.மண்டல கமிஷன் பரிந்துரைப்படி, மீனவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். டீசல் விலையில்
 மீனவர்களை பாதுகாக்க கையெழுத்து இயக்கம்

காசிமேடு : காசிமேடில் மீனவர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடந்தது.

சென்னை காசிமேடில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மீனவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், தேசிய கடல் மீன் வள மசோதா 2021வை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.மண்டல கமிஷன் பரிந்துரைப்படி, மீனவ மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். டீசல் விலையில் மானிய அளவை உயர்த்தித் தர வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுகுறித்து, தமிழ்நாடு - புதுச்சேரி மீனவர் பேரமைப்பு தலைவர் கோசு மணி கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளிடம் மீனவ மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க கோரி, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி உள்ளோம்.காசிமேடில் துவக்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வழங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X