பொது செய்தி

தமிழ்நாடு

வெளி மாவட்ட மாணவர்களுக்கு 'ஜூம்' செயலியில் தேர்வு பயிற்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:வெளிமாவட்ட மாணவர், நேரில் வர இயலாதவருக்காக, நேரடி போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு, 'ஜூம்' செயலி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு களுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேரடி பயிற்சி இலவசமாக
 வெளி மாவட்ட மாணவர்களுக்கு 'ஜூம்' செயலியில் தேர்வு பயிற்சி

திருப்பூர்:வெளிமாவட்ட மாணவர், நேரில் வர இயலாதவருக்காக, நேரடி போட்டித்தேர்வு பயிற்சி வகுப்பு, 'ஜூம்' செயலி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு களுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேரடி பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.கொரோனா ஊரடங்கு காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, தேர்வு எழுதுவோர் பயிற்சிக்கு வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, இலவச பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடக்கிறது. நேரில் வர இயலாதவர்கள் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், 'ஜூம்' மீட்டிங் மூலமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா ஊரடங்கு காலத்தில், 'ஆன்லைன்' மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, நேரடி பயிற்சி முகாம் நடந்து வருகிறது. நேரில் வரமுடியாதவர், வெளிமாவட்ட மாணவர் வசதிக்காக, நேரடி வகுப்பு, 'ஜூம் மீட்டிங்' வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம், திருப்பூர் மட்டுமல்லாது, பிற மாவட்ட மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X