குன்றத்தூரில் அறிவிக்கப்படாத மின் வெட்டு; ஊராட்சி தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துார் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், தினசரி அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளதால், இப்பிரச்னை ஊராட்சி தேர்த லில் எதிரொலிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட திருமுடிவாக்கம் பகுதியில், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது.பாதிப்புஇங்கிருந்து, குன்றத்துார், சிறுகளத்துார், நந்தம்பாக்கம், பழந்தண்டலம்,

குன்றத்துார் : குன்றத்துார் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், தினசரி அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளதால், இப்பிரச்னை ஊராட்சி தேர்த லில் எதிரொலிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

குன்றத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட திருமுடிவாக்கம் பகுதியில், துணை மின் நிலையம் இயங்கி வருகிறது.பாதிப்புஇங்கிருந்து, குன்றத்துார், சிறுகளத்துார், நந்தம்பாக்கம், பழந்தண்டலம், திருமுடிவாக்கம், வரதராஜபுரம், எருமையூர், நடுவீரப்பட்டு, பூந்தண்டலம், சோமங்கலம், அமரம்பேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபகாலமாக, துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அறிவிக்கப்படாத மின் வெட்டு அமலில் உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை முதல், மாலை வரை 4 - 5 முறைக்கு மேல் மின்தடை ஏற்படுகிறது.இதனால், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். முதியோர், குழந்தைகள் அவதிப்படுகின்றனர். கடைக்காரர்களுக்கு வியாபாரமும், சிறு தொழில்களும் பாதிக்கப்படுகின்றன.


கோபம்


திடீர் மின் வெட்டால், வீடு உபயோக மின் சாதனங்கள் பழுதாகின்றன. பல மாதங்களாக நீடிக்கும் இப்பிரச்னை குறித்து, மின்வாரியத்தில் புகார் அளித்தும் பலன் இல்லை.இதே நிலை தொடர்ந்தால், இந்த பிரச்னை, வரும் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: குன்றத்துார் ஒன்றியத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

இங்குள்ள வாக்காளர்கள், மின் வாரியத்தினர் மீதான கோபத்தை வேட்பாளர்கள் மீது காண்பிக்க பெருமளவு வாய்ப்புள்ளது. தேர்தலுக்கு முன் இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், ஆளுங்கட்சி மற்றும் அதன் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்திப்பர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X