பொது செய்தி

தமிழ்நாடு

பிரச்னைகளை சரி செய்யாவிடில் போராட்டம்! எம்.எல்.ஏ., தடாலடி; ஒப்பந்ததாரர் கலக்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்;ரோடு, சாக்கடை குறித்து நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ., பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிடில், போராட்டம் நடத்துவேன், என்று எச்சரிக்கை விடுத்தார்.திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. குழாய் மற்றும் கேபிள் பதிப்புக்கு தோண்டிய குழிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. இந்த ரோட்டில் மையத்தடுப்பு மற்றும் வேக தடுப்புகள் அமைக்க
 பிரச்னைகளை சரி செய்யாவிடில் போராட்டம்! எம்.எல்.ஏ., தடாலடி; ஒப்பந்ததாரர் கலக்கம்

திருப்பூர்;ரோடு, சாக்கடை குறித்து நேரில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ., பிரச்னைகளுக்கு தீர்வு காணாவிடில், போராட்டம் நடத்துவேன், என்று எச்சரிக்கை விடுத்தார்.திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் வாகன விபத்துகள் அடிக்கடி ஏற்படுகிறது. குழாய் மற்றும் கேபிள் பதிப்புக்கு தோண்டிய குழிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. இந்த ரோட்டில் மையத்தடுப்பு மற்றும் வேக தடுப்புகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.இது குறித்து தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்ட அவர், ரோட்டை சீரமைக்கவும், விபத்து தடுப்புக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.கேரக்டரை புரிஞ்சுகோங்க...திருப்பூரில் நேற்று முன்தினம் பரவலாக பெய்த மழையால், நகரின் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் மழைநீரும், கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடியது. புதிய கால்வாய்கள் கட்டுமானப் பணி நடைபெறும் சில இடங்களில் பெரும் அவதி நிலவியது. அவ்வகையில், கொங்கு மெயின் ரோட்டில் கால்வாய் கட்டுமான பணி படுமந்தமாக நடைபெறுகிறது.இது குறித்து நேற்று காலை எம்.எல்.ஏ., செல்வராஜ் வீட்டில் சென்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், கடுப்பான எம்.எல்.ஏ., மாநகராட்சி அதிகாரிகள், கட்டுமான ஒப்பந்ததாரரை வரவழைத்து, அவர்கள் மத்தியில் பேசியதாவது:நான்கு மாதங்களாக பணிகளை போட்டு வைத்துள்ளீர்கள். மக்கள் நடக்கவே முடியவில்லை. இதனால், அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். அதற்கு அனுமதிக்க மாட்டேன்.இதில், தாமதம் ஏற்பட்டால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் நோக்கத்தில், கான்ட்ராக்டர் நடந்து கொள்கிறீர்கள். விரைவில் சரி செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவேன். என் கேரக்டரே அதுதான். சற்று வித்தியாசமாக உட்காருவேன். இது எல்ேலாருக்கும் தெரியும்.இவ்வாறு அவர் பேசினார்.எம்.எல்.ஏ., செல்வராஜின், இந்த தடாலடி பேச்சை கேட்ட, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர்.நான்கு மாதங்களாக பணிகளை போட்டு வைத்துள்ளீர்கள். மக்கள் நடக்கவே முடியவில்லை. இதனால், அரசுக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும். அதற்கு அனுமதிக்க மாட்டேன். இனியாவது, கான்ட்ராக்டர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X