தமிழ் வழி இடஒதுக்கீடு மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வழி இடஒதுக்கீடு மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு

Added : செப் 25, 2021
Share
திருப்பூர்:பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள், சான்றிதழ் சரிபார்ப்பு
 தமிழ் வழி இடஒதுக்கீடு மாணவர் சான்றிதழ் சரிபார்ப்பு

திருப்பூர்:பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியாகியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு வேளாண் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விண்ணப்பங்கள், சான்றிதழ் சரிபார்ப்பு ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. இதுவரை, 90 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், '' மாவட்ட அளவில் இரண்டு பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு நான்கு பேர் வீதம், மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ், மாணவர்சேர்க்கை பதிவு, வருகைப்பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்கின்றனர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X