குரோம்பேட்டையில் குடிநீர் பஞ்சம்; குழாய் பதித்தும் பலன் இல்லை

Added : செப் 25, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டையில் வீடுகள் தோறும் குழாய் பதித்தும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆண்டு கணக்கில் குடிநீர் 'சப்ளை' செய்யப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றனர். பல்லாவரம் நகராட்சியில், பாலாறு மற்றும் 'மெட்ரோ வாட்டர்' குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கோடையில், இந்த

குரோம்பேட்டை : பல்லாவரம் நகராட்சி, குரோம்பேட்டையில் வீடுகள் தோறும் குழாய் பதித்தும், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஆண்டு கணக்கில் குடிநீர் 'சப்ளை' செய்யப்படாமல் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

பல்லாவரம் நகராட்சியில், பாலாறு மற்றும் 'மெட்ரோ வாட்டர்' குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கோடையில், இந்த திட்டங்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


தவிப்பு


பணம் கொடுத்து, லாரி தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.ஆண்டுதோறும் ஏற்படும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, பல்லாவரம்- - பம்மல்- - அனகாபுத்துார் கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.அத்திட்டத்தின் படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, இந்நகராட்சி பகுதிகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டது.பல்லாவரம் நகராட்சியில் 42 வார்டுகளிலும் தெருக்கள் தோறும் குழாய் பதிக்கப்பட்டு, வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டது.

இப்பணி முடிந்து, திட்டம் பயன்பாட்டிற்கு வந்தும், பல வார்டுகளில் இன்னும் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குறிப்பாக, 29,33,35,36 ஆகிய வார்டுகளில் குழாய் பதித்தும் இதுவரை தண்ணீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் கடும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கின்றனர்.


பொய்


இது குறித்து, பல்லாவரம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் இணைப்பு மைய துணைத் தலைவர் எம்.ஸ்ரீதர், 54 கூறியதாவது:புருஷோத்தமன், பாலாஜி, புவனேஸ்வரி, பாஷ்யம், என்.எஸ்.கே.,மற்றும் நேரு நகர் பகுதிகள், நல்லப்பா தெரு ஆகிய இடங்களில் பதிக்கப்பட்ட குழாய்களில் குடிநீர் வருவதே இல்லை.வழக்கம் போல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை பாலாறு குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.

அதுவும், அரை மணி நேரம் மட்டுமே வருவதால் போதுமானதாக இல்லை.புகார் எழும்போதெல்லாம் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுவது பொய். பொறியாளர், உதவி பொறியாளரிடம் பல முறை கூறிவிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நகராட்சி நிர்வாகம், இப்பகுதி மக்களை முற்றிலும் வஞ்சிக்கிறது. உயர் அதிகாரிகள் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் கோடையிலாவது எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X