பொது செய்தி

தமிழ்நாடு

பழைய மின்மாற்றியால் வில்லிவாக்கம் மக்கள் தவிப்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
வில்லிவாக்கம் : வில்லிவாக்கத்தில், புதிய மின்மாற்றி அமைக்க பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், வில்லிவாக்கம், அகத்தியர் நகர் விரிவு, பொன் விழா நகர் உள்ளது. இப்பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள, பழைய மின்மாற்றி அடிக்கடி வெடித்து பழுதடைவதால், மின்சாரம் தடைபடுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில்,

வில்லிவாக்கம் : வில்லிவாக்கத்தில், புதிய மின்மாற்றி அமைக்க பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில், வில்லிவாக்கம், அகத்தியர் நகர் விரிவு, பொன் விழா நகர் உள்ளது. இப்பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இங்குள்ள, பழைய மின்மாற்றி அடிக்கடி வெடித்து பழுதடைவதால், மின்சாரம் தடைபடுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில், மின்சாரம் துண்டிக்கப்படுவதால், குழந்தைகள் முதல் முதியோர் வரை சிரமப்படுகின்றனர்.

இங்கு, பல லட்சம் ரூபாய் செலவில், மூன்று புதிய நவீன மின் மாற்றிகள் கொண்டு வரப்பட்டன. ஆனால், பழைய மின்மாற்றியை அகற்றி, புதிய மின்மாற்றியை பொறுத்தவில்லை. இதுதொடர்பாக, பல முறை மின்சாரத் துறை அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.எனவே, அடிக்கடி பழுதடையும் பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிய மின்மாற்றியை அமைக்க வேண்டும் என, வில்லிவாக்கம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X