பொது செய்தி

தமிழ்நாடு

'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' அறிவிப்பு பலகை; ' பி.ஏ.,வுக்கு 'ரெய்டு'

Added : செப் 25, 2021
Share
Advertisement
தாம்பரம் : 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என, அறிவிப்பு பலகை வைத்த நேர்முக உதவியாளரை, வட்டார போக்குவரத்து அலுவலர் கடுமையாக விமர்சித்ததால், அந்த பலகை உடனடியாக அகற்றப்பட்டது. மேற்கு தாம்பரம் தர்காஸ் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உட்பட, பல்வேறு பணிகளுக்காக வருவோர், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக

தாம்பரம் : 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என, அறிவிப்பு பலகை வைத்த நேர்முக உதவியாளரை, வட்டார போக்குவரத்து அலுவலர் கடுமையாக விமர்சித்ததால், அந்த பலகை உடனடியாக அகற்றப்பட்டது.

மேற்கு தாம்பரம் தர்காஸ் சாலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உட்பட, பல்வேறு பணிகளுக்காக வருவோர், அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளதாக நம் நாளிதழில் செய்தி வெளியானது.

தொடர்ந்து, இணை போக்குவரத்து கமிஷனர், சமீபத்தில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு 'டோஸ்' விட்டார். இதை தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர், நேற்று காலை தன் அலுவலக அறையில், 'லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்' என, அறிவிப்பு பலகையை வைத்தார்.

அதை கண்ட மற்ற அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகரிடம் புகார் தெரிவித்தனர்.தொடர்ந்து அவர், நேர்முக உதவியாளரை கடிந்து கொண்டதால், அந்த பலகை அகற்றப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X