கல்விக்கடனுக்கு அலைக்கழிப்பு: மாணவர்கள் குற்றச்சாட்டு

Added : செப் 25, 2021
Share
Advertisement
பல்லடம்:கல்விக் கடன் பெற அலைக்கழிக்கப்படுவதாக, மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பல்லடம் அருகேயுள்ள கரைப்புதுார் ஊராட்சி பொன்நகர் கிராமத்தை சேர்ந்த கவுசிக், 18, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவர் கூறுகையில், 'இரண்டு ஆண்டாக கல்விக்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்து வருகிறேன். மூன்று மேலாளர்கள் மாறிவிட்டனர். மூன்று முறை

பல்லடம்:கல்விக் கடன் பெற அலைக்கழிக்கப்படுவதாக, மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.பல்லடம் அருகேயுள்ள கரைப்புதுார் ஊராட்சி பொன்நகர் கிராமத்தை சேர்ந்த கவுசிக், 18, கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படிக்கிறார். அவர் கூறுகையில், 'இரண்டு ஆண்டாக கல்விக்கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்து வருகிறேன். மூன்று மேலாளர்கள் மாறிவிட்டனர். மூன்று முறை விண்ணப்பித்துள்ளேன். எதற்காக கடன் நிராகரிக்கப்படுகிறது என்று கூறாமல், அலைக்கழிக்கின்றனர்,' என்றார்.இதேபோல், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன், 18, தனியார் கல்லுாரியில், பி.டெக்., மூன்றாம் ஆண்டு படிக்கிறார். தந்தை பனியன் தொழிலாளி. அவர் கூறுகையில், ''கடந்த ஓராண்டாக தொடர்ந்து விண்ணப்பித்தும் கல்விக்கடன் கிடைக்கவில்லை. வங்கியினர், அதற்கான காரணத்தையும் தெளிவாக கூற மறுக்கின்றனர். வறுமையில் உள்ளவர்களுக்கு வங்கி கடன் மறுக்கப்படுகிறதா என்பதும் தெரியவில்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X