சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் கணவரை இழந்த மனைவிக்கு ரூ.1.18 கோடி

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை : விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு, 1.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர், அமோஸ் ஜீவா 41; கல்லுாரி பேராசிரியர். இவர், 2015, டிசம்பரில், செம்பாக்கத்திலிருந்து, காரப்பாக்கத்தில் உள்ள கல்லுாரிக்கு பைக்கில் சென்றுள்ளார்.அப்போது, அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, ஜீவா பைக் மீது

சென்னை : விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு, 1.18 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர், அமோஸ் ஜீவா 41; கல்லுாரி பேராசிரியர். இவர், 2015, டிசம்பரில், செம்பாக்கத்திலிருந்து, காரப்பாக்கத்தில் உள்ள கல்லுாரிக்கு பைக்கில் சென்றுள்ளார்.அப்போது, அதிவேகமாக வந்த டேங்கர் லாரி, ஜீவா பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கணவர் இறப்புக்கு, 5.5 கோடி ரூபாய் இழப்பீடு கோரி, அமோஸ் ஜீவாவின் மனைவி, தேவிகாராணி கிறிஸ்டினா அமோஸ், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது. விசாரணையில் மனுதாரர் கணவர் இறப்புக்கு, லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவானது.

இதையடுத்து, ''மனுதாரருக்கு இழப்பீடாக, 1 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது. இதில், மனுதாரர் கணவர், ஹெல்ெமட் அணியாத காரணத்தால், 10 சதவீதமாக, 13.17 லட்சம் ரூபாய் கழிக்கப்பட்டு, 1 கோடியே 18 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டியுடன், ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்,'' என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X