பொது செய்தி

தமிழ்நாடு

'போட்டோவ காணோம்'; குளறுபடியில் இது புதுசு!

Added : செப் 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : வாக்காளர் அடையாள அட்டையில், விண்ணப்பதாரரின் புகைப்படத்திற்கு பதில், அவரது விண்ணப்பமே புகைப்படமாக இடம் பெற்ற 'காமெடி' அரங்கேறி உள்ளது.சென்னை, கொளத்துார், திருமால் நகர், ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். வெளிநாட்டில் வசித்த இவர், சமீபத்தில் சென்னை திரும்பினார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின், அடையாள அட்டை கேட்டு மனு செய்தார்.சட்டசபை
 'போட்டோவ காணோம்'; குளறுபடியில் இது புதுசு!

சென்னை : வாக்காளர் அடையாள அட்டையில், விண்ணப்பதாரரின் புகைப்படத்திற்கு பதில், அவரது விண்ணப்பமே புகைப்படமாக இடம் பெற்ற 'காமெடி' அரங்கேறி உள்ளது.

சென்னை, கொளத்துார், திருமால் நகர், ஆறாவது தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். வெளிநாட்டில் வசித்த இவர், சமீபத்தில் சென்னை திரும்பினார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த பின், அடையாள அட்டை கேட்டு மனு செய்தார்.

சட்டசபை தேர்தலுக்கு முன், இவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையில், சுவாமிநாதன் புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில், அவர் மனு செய்திருந்த விண்ணப்பம் இருந்தது. தற்போது இவர், ஆதார் திருத்தம் உள்ளிட்ட சேவையை மேற்கொள்ள, வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து, அவர் கூறியதாவது:புதிய அடையாள அட்டையை பெற்ற போது, அதில் என் படத்தை காணவில்லை. மாறாக, விண்ணப்ப மனுவின் படம் இருந்தது.சட்டசபை தேர்தலில் ஓட்டு போட சென்ற போது, 'இப்படி ஒரு அடையாள அட்டையா' என, அதிகாரிகளே வியந்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202111:18:56 IST Report Abuse
அப்புசாமி டிஜிட்டல் இந்தியா மாதிரி இது டிஜிட்டல் தமுழகம். அங்கே மயில், குருவி, ஷாரூக் கான் படமெல்லாம் வெச்சாங்க. இங்கே விண்ணப்பத்தையே படமா வெச்சுட்டாங்க. அங்கே ஆத்மநிர்பரா. இங்கே மேட் இன் டமில்நாட்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X