பொது செய்தி

தமிழ்நாடு

ஆகாயத்தாமரை அவசரமாக அகற்றம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை : செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், 200 அடி அகலம், 3 கி.மீ., நீளமுள்ள பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு வருகிறது. கடந்தாண்டு முதல் இந்த கால்வாயில், ஆகாய தாமரைகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. தலைமை செயலர் இறையன்பு வருகையை அறிந்த செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலக அதிகாரிகள், ஆகாய தாமரை தாவரங்களை அகற்றும் பணியை, நேற்று காலை அவசரமாக

சென்னை : செங்குன்றம் அடுத்த சோழவரம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், 200 அடி அகலம், 3 கி.மீ., நீளமுள்ள பேபி கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு வருகிறது. கடந்தாண்டு முதல் இந்த கால்வாயில், ஆகாய தாமரைகள் அடர்ந்து வளர்ந்திருந்தன.

தலைமை செயலர் இறையன்பு வருகையை அறிந்த செங்குன்றம் நீர்வளத்துறை அலுவலக அதிகாரிகள், ஆகாய தாமரை தாவரங்களை அகற்றும் பணியை, நேற்று காலை அவசரமாக துவங்கினர். நேற்று மாலை, 1 கி.மீ., துாரத்திற்கு, பல 'டன்' எடை தாவரங்கள் உட்பட பல்வேறு கழிவுகள் அகற்றப்பட்டன. அடுத்த ஓரிரு நாட்களில், அவை மீண்டும், கால்வாய்க்குள் சரியும் நிலை உள்ளது. கால்வாயின் இரு பக்க கரைகளை வரையறுத்து, தடுப்பு அமைத்தால் மட்டுமே, புழல் ஏரிக்கு, கழிவுநீர் கலப்பில்லாத சோழவரம் ஏரி நீர் கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X