சில வரி செய்திகள்... தூர்வாரும் பணிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்... தூர்வாரும் பணிகள்

Added : செப் 25, 2021
Share
(படம்)பல்லடம் நகராட்சி பகுதிகளில், மழைநீர் வடிகால் துார்ர்வாரும் பணி நடந்து வருகிறது. குளம், குட்டைகள், நீர்நிலைகள் உள்ளிட்டவை ஏராளமாக இருந்தாலும், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் காரணமாக, மழைநீர் சேகரிப்பு என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. கட்டடங்கள் கட்டியும், வழித்தடங்கள் உருவாக்கியும் நீர்வழிப் பாதைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களை
 சில வரி செய்திகள்... தூர்வாரும் பணிகள்

(படம்)பல்லடம் நகராட்சி பகுதிகளில், மழைநீர் வடிகால் துார்ர்வாரும் பணி நடந்து வருகிறது. குளம், குட்டைகள், நீர்நிலைகள் உள்ளிட்டவை ஏராளமாக இருந்தாலும், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் காரணமாக, மழைநீர் சேகரிப்பு என்பது பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. கட்டடங்கள் கட்டியும், வழித்தடங்கள் உருவாக்கியும் நீர்வழிப் பாதைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாருவது ஒருபுறம் இருந்தாலும், ஆக்கிரமிப்பில் உள்ள நீர்வழிப் பாதைகளை மீட்டால் மட்டுமே மழைநீர் சேகரிப்பு முழுமை பெறும்.

புதிய சாலைக்கு பூமி பூஜை

பொங்கலுார், கண்டியன்கோவில் - தாயம்பாளையம் வரை செல்லும்,3.4 கிலோ மீட்டர் நீளம் உள்ள ரோடு குண்டும் குழியுமாக மாறியது. ரோட்டை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 56.30 லட்சம் ரூபாயில், தார் ரோடு அமைக்க பூமி பூஜை நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் குமார் பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஒன்றிய துணை தலைவி அபிராமி, ஊராட்சி தலைவர் கோபால், துணை தலைவர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவியருக்கு விழிப்புணர்வு

மத்திய அரசின், 'போஷன் அபியான்' திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் ஜெய்வாபாய் பள்ளியில் நேற்று நடந்தது. 50 மாணவியருக்கு மருத்துவ குழுவினரால் ரத்த சோகைக்கான பரிசோதனை எடுக்கப்பட்டது.

அலுவலர்கள் கூறுகையில், 'ரத்தசோகை வராமல் தடுக்க இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் தினசரி உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கேழ்வரகு, வெல்லம் சேர்த்து தயாரித்த அதிரசம், வேர்க்கடலை, பொட்டுக்கடலையுடன் எள்ளு புதினா, கருவேப்பிலை துவையல் சாப்பிட வேண்டும்,' என்றனர்.

பட்டா கேட்டு மனு

திருப்பூர் மாநகராட்சி, 20 வது வார்டு போயம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் 70 க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 40 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 12 பேருக்கு பட்டா வழங்கப்படவில்லை. இதற்காக, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், தலைமையில் 12 பேர் நேற்று திருப்பூர் வடக்கு தாசில்தார் ஜெகநாதனை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.

பாடப்புத்தகம் ஒப்படைப்பு
கொரோனா தொற்று பரவலால், கடந்தாண்டு பாடப்புத்தங்கள் அந்தந்த ஆசிரியர்களிம் ஒப்படைக்கப்பட்டு, மாணவருக்கு வினியோகிக்கப்பட்டது. அதேபோல நடப்பாண்டும், பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு துவக்க, மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான தொகுப்புகள் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி நேற்று துவங்கியது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கையொப்பம் பெற்று, பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட தொகுப்புகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. நாளை (இன்று) மதியம் 2.00 மணிக்குள் எடுத்துச் செல்லவேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலையோரம் கட்டிடக்கழிவு
வெள்ளகோவில் -- மூலனுார் ரோட்டில், கரட்டுப்பாளையம் பகுதியில் சாலையோரம் கட்டட கழிவுகளை இரவில் கொட்டி விட்டு சென்று விடுகின்றனர். பழைய கட்டடத்தில் வீணாகும் செங்கற்கள், உடைந்த டைல்ஸ், காரை துகள்கள், கான்கிரீட் கலவைகளை கொட்டுவதால் சீர்கேடு ஏற்படுகிறது. சாலையோரம் கட்டட கழிவுகளை குவியலாகக் கொட்டுவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, கழிவுகளை நகரின் ஒதுக்கு புறமாக உள்ள பாறைக்குழி மற்றும் பள்ளங்களில் கொட்ட வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

துாய்மை பணி தீவிரம்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள மழை நீர் வடிகால், கழிவு நீர் கால்வாய் துார்வாரி சுத்தப்படுத்தும் சிறப்பு முகாம் வருகிறது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 1,500 துாய்மை பணியாளர்கள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை பணியாற்றுகின்றனர். குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாய்கள் தவிர நொய்யலுக்கு நீர் ஆதாரங்களாக உள்ள ஜம்மனை, சபரி மற்றும் சங்கிலி பள்ளம் ஆகிய ஓடைகளும் துார்வாரும் பணி நடக்கிறது. இப்பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.---

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X