பொது செய்தி

தமிழ்நாடு

தமிழாய்வு நிறுவனத்தில் இசை பயிலரங்கம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை : தரமணி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், ஆய்வு மாணவர்களுக்கு, தமிழ் செவ்வியல் இசை குறித்த ஒரு வார பயிலரங்கம் நடைபெற உள்ளது.இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ் இசையின் நுட்பம், மரபிசை முறை, தனித்தன்மை, வளர்ச்சி, சிறப்புகள் ஆகியவற்றை ஆய்வு மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், அக்., 6 முதல் 12 வரை, 'தமிழ்ச் செவ்விலக்கியங்களில் இசைக்

சென்னை : தரமணி செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், ஆய்வு மாணவர்களுக்கு, தமிழ் செவ்வியல் இசை குறித்த ஒரு வார பயிலரங்கம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ் இசையின் நுட்பம், மரபிசை முறை, தனித்தன்மை, வளர்ச்சி, சிறப்புகள் ஆகியவற்றை ஆய்வு மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், அக்., 6 முதல் 12 வரை, 'தமிழ்ச் செவ்விலக்கியங்களில் இசைக் கலையும் நாட்டியக் கலையும்' என்ற தலைப்பில், பயிலரங்கம் நடைபெற உள்ளது.

பயிலரங்கில், இசை மற்றும் நாட்டியத் துறை அறிஞர்கள் பயிற்சி அளிப்பர். இதில், தமிழிசை பாட ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட மாணவர்கள் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளோர், workshopa@cict.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தகுதியான 20 பேர் மட்டுமே பங்கேற்க இயலும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X