பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி ஆபீசில் அலுவலர்கள் மாற்றம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் கிராந்திகுமார் கமிஷனராகப் பொறுப்பேற்ற பின்னர் நான்கு மண்டலங்களில் பணியாற்றும் உதவி கமிஷனர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்களும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.இந்நிலையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி கமிஷனர்கள் நிலையிலான அலுவலர்கள் பிரிவு மாற்றப்பட்டுள்ளனர்.கணக்கு பிரிவு உதவி கமிஷனர் சந்தான நாராயணன்,

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சியில் கிராந்திகுமார் கமிஷனராகப் பொறுப்பேற்ற பின்னர் நான்கு மண்டலங்களில் பணியாற்றும் உதவி கமிஷனர்கள் மற்றும் மண்டல சுகாதார அலுவலர்களும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.இந்நிலையில், மாநகராட்சி மைய அலுவலகத்தில் பணியாற்றும் உதவி கமிஷனர்கள் நிலையிலான அலுவலர்கள் பிரிவு மாற்றப்பட்டுள்ளனர்.கணக்கு பிரிவு உதவி கமிஷனர் சந்தான நாராயணன், நிர்வாக அலுவலக உதவி கமிஷனராகவும், வருவாய் உதவி கமிஷனர் தங்கவேல் ராஜன் கணக்கு பிரிவுக்கும், நிர்வாக அலுவலர் செந்தில்குமார் வருவாய் பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். அலுவலக மேற்பார்வையாளர் நேசராஜன், நிர்வாக அலுவலராக நியமிக்கப்பட்டார்.உதவி பொறியாளர்கள் மாற்றம்முதலாம் மண்டலத்தில் உதவி பொறியாளராக இருந்த முனியாண்டி, 4ம் மண்டலத்துக்கும், அங்கிருந்த கவுரி சங்கர் முதலாம் மண்டலத்துக்கும், 2வது மண்டலத்தில் இருந்த ஆறுமுகம், 3வது மண்டலத்துக்கும், 3வது மண்டலத்தில் பணியாற்றிய கனகராஜ், 2வது மண்டலத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X