அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாராபுரம் ஒன்றிய வார்டில் தி.மு.க., - பா.ஜ., நேரடி போட்டி

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:அ.தி.மு.க., கூட்டணியில், தாராபுரம் ஒன்றிய இடைத்தேர்தலில், பா.ஜ., களமிறங்கியுள்ளன.தாராபுரம் ஒன்றியத்தில், 12வது ஒன்றிய வார்டு காலியாக இருந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அக்., 6ல் தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணியில், தாராபுரம் ஒன்றிய வார்டில், பா.ஜ., களமிறங்கியுள்ளது.

திருப்பூர்:அ.தி.மு.க., கூட்டணியில், தாராபுரம் ஒன்றிய இடைத்தேர்தலில், பா.ஜ., களமிறங்கியுள்ளன.தாராபுரம் ஒன்றியத்தில், 12வது ஒன்றிய வார்டு காலியாக இருந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அக்., 6ல் தேர்தல் நடக்க உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், ஏழு பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.அ.தி.மு.க., கூட்டணியில், தாராபுரம் ஒன்றிய வார்டில், பா.ஜ., களமிறங்கியுள்ளது. பா.ஜ., சார்பில், கதிர்வேல், கிருஷ்ணன், முருகசாமி ஆகியோரும், தி.மு.க.,சார்பில், சுந்தரராசு, சுப்பிரமணி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அ.ம.மு.க., சார்பில், திருவினாகுடியும், சுயேட்சையாக ரவிச்சந்திரனும் களத்தில் உள்ளனர்.மனு வாபஸ் அவகாசத்துக்குள், மாற்று வேட்பாளர்கள் வாபஸ் பெற உள்ளனர்; அதற்கு பிறகு, ஐந்து பேர், களத்தில் இருப்பார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.மாவட்ட ஊராட்சியின், 10வது வார்டில், அ.தி.மு.க., - தி.மு.க., நேரடியாக களமிறங்கியுள்ளன. தே.மு.தி.க., -நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., கட்சியும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது.போட்டியின்றி தேர்வுஊராட்சிகளின், 14 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில், 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஊத்துக்குளி ஒன்றியம் - கணபதிபாளையம் ஊராட்சி; காங்கயம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி; தாராபுரம் ஒன்றியம் - பொன்னாபுரம் ஊராட்சி; குண்டடம் - எல்லைப்பாளையம்புதுார் ஊராட்சி ஆகிய நான்கு வார்டுகளில், தலா ஒருவர் மட்டுமே, மனுத்தாக்கல் செய்துள்ளதால், போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X