பொது செய்தி

தமிழ்நாடு

கருவலூர் ஊராட்சி தலைவர் தேர்தல்: களத்தில் வேட்பாளர்கள் 'சுறுசுறு'

Added : செப் 25, 2021
Share
Advertisement
அவிநாசி:கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கருவலுார் ஊராட்சியில், 5,122 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., -கம்யூ., -பா.ஜ.. அ.ம.மு.க., என, அரசியல் கட்சிகள் இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் செல்வாக்குள்ளவர்கள் களம் இறங்குவர்.ஊராட்சி தலைவராக இருந்த மாரிமுத்து, கடந்தாண்டு உடல்நலக்குறைவால்

அவிநாசி:கருவலுார் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில், 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கருவலுார் ஊராட்சியில், 5,122 வாக்காளர்கள் உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., -கம்யூ., -பா.ஜ.. அ.ம.மு.க., என, அரசியல் கட்சிகள் இருப்பினும், உள்ளாட்சி தேர்தலில் மக்கள் செல்வாக்குள்ளவர்கள் களம் இறங்குவர்.ஊராட்சி தலைவராக இருந்த மாரிமுத்து, கடந்தாண்டு உடல்நலக்குறைவால் இறந்ததால், இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணி ஆதரவில் முருகன், என்பவர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர், ஊராட்சியில், கடந்த, 10 ஆண்டுகளாக பம்ப் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.அ.தி.மு.க.. ஆதரவில், முருகேசன் போட்டியிடுகிறார். இவர், கடந்த முறை தேர்தலில், கட்சியில் 'சீட்' கிடைக்காததால், சுயேட்சையாக நின்று, இரண்டாமிடம் பிடித்தவர்.இவர்களை தவிர ரங்கசாமி, அரவிந்தசாமி, கலாமணி, கீதா, சீதா, செந்தில்குமார், துரைராஜ் என, 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.இன்று மாலை வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் உள்ள நிலையில், சிலர் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்கள், வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்க துவங்கி விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X