பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்கே வழிகாட்டும் காப்பீடு திட்டம்!

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:''தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாக விளங்குகிறது,'' என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் - மத்திய அரசின் காப்பீடு திட்ட மூன்றாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு

திருப்பூர்:''தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம், இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டமாக விளங்குகிறது,'' என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் - மத்திய அரசின் காப்பீடு திட்ட மூன்றாம் ஆண்டு விழா, நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி, மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி முன்னிலை வகித்தார்.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு, அடையாள அட்டை வழங்கினார்.சிறப்பாக பணியாற்றிய, காப்பீடு திட்ட அலுவலருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். திட்டத்தில் பயனடைந்த மக்களுக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில், மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.அமைச்சர் பேசியதாவது:தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில், மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்தினார். இத்திட்டத்தில், ஏழை, எளிய மக்கள், இலவசமாக உயர் சிகிச்சை பெற முடிகிறது.மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், 28 தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மூன்று ஆண்டில், 40 ஆயிரத்து, 178 பேர் பயனடைந்துள்ளனர்; 92.64 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X