பொது செய்தி

தமிழ்நாடு

2வது நாளாக கனமழை; சாலைகளில் வெள்ளம்

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:தென்மேற்கு பருவமழை விடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, திருப்பூரில் மட்டும், 65 மி.மீ., மழை பெய்துள்ளது.அவிநாசியில், 18 மி.மீ., - வெள்ளகோவிலில், 5.40 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்று பகல் நேரத்தில் கடும் வெயிலாக காணப்பட்டது. மாலை நேரத்துக்கு பின், குளிர்ந்த காற்று வீசியது. இரவு, 7:00 மணி முதல்,
 2வது நாளாக கனமழை; சாலைகளில் வெள்ளம்

திருப்பூர்:தென்மேற்கு பருவமழை விடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை, திருப்பூரில் மட்டும், 65 மி.மீ., மழை பெய்துள்ளது.அவிநாசியில், 18 மி.மீ., - வெள்ளகோவிலில், 5.40 மி.மீ., பதிவாகியுள்ளது. நேற்று பகல் நேரத்தில் கடும் வெயிலாக காணப்பட்டது. மாலை நேரத்துக்கு பின், குளிர்ந்த காற்று வீசியது. இரவு, 7:00 மணி முதல், தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு, படியூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.கனமழையால், ரோடுகளில் தாழ்வான பகுதிகளில் ஓடை போல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறிது நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட், பிச்சம்பாளையம் புதுார் பகுதியில் கனமழை பெய்ததால், சாக்கடை அடைப்பு ஏற்பட்டு. ரோடு, வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X