கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு ஒன்றியத்தில், வடகிழக்கு பருவமழை கால பாதிப்புகளை தவிர்க்க, ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், சாக்கடை, மழை நீர் கால்வாய்கள் துார்வாரும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு பி.டி.ஓ., விவேகானந்தன், ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சி தலைவர்களுக்கும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது:வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வீதிகள், வீடுகளின் முன், மழை நீர் தேங்கும்பட்சத்தில், டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. மழை நீர் சாக்கடையில் கலந்து தேங்கி நிற்கும் அபாயமும் உள்ளது.
பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க, மழை நீர் மற்றும் சாக்கடை கால்வாய்களையும், 100 சதவீதம் துார்வாரி துாய்மைப்படுத்த வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ளும்போது, பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கொள்ள வேண்டும். குடிநீர் கசிவு, குழாய் உடைப்பு மற்றும் தெருவிளக்கு எரியாமல் இருந்தால், உடனடியாக சீரமைக்க வேண்டும்.இப்பணிகளை, 100 சதவீதம் முடித்து, கிணத்துக்கடவு ஒன்றியம் முன்னோடியாக திகழ உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement