கிணத்துக்கடவு:கொரோனா தடுப்பூசி சான்று இல்லாமல், வெளியூர், வெளிநாடு செல்பவர்களின் அவசரத்தை கருத்தில் கொண்டு, தனி முகாம் அமைத்து தடுப்பூசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.கொரோனா தொற்று பரவலை தடுக்க, கிணத்துக்கடவு தாலுகாவில் நல்லட்டிபாளையம், சொக்கனுார் மற்றும் வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராமங்களில் சிறப்பு முகாம் அமைத்து, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.18 வயதுக்கு மேற்பட்டோரில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ளோருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மூன்று மாதங்களாகியும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கிடைக்காத நிலை உள்ளது.வெளிநாடு செல்பவர்கள், வெளியூர் வேலைக்கு செல்பவர்கள், மத்திய, மாநில அரசு பணிக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் என்பதால், செய்வதறியாது திகைத்துள்ளனர்.எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில், சிறப்பு முகாம் அமைத்து, இது வரை தடுப்பூசி சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு, சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE