சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பாளர்கள் 1,216 பேருக்கு அதிகாரிகள் 'நோட்டீஸ்'

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களில், 1,216 பேருக்கு, முதல் கட்டமாக, கருத்து கேட்கும் படிவம் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 196வது வார்டுக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில், அரசுக்கு சொந்தமான கைவேலி இடம் 160 ஏக்கர் உள்ளது.இதை, உள்ளூர்

ஈஞ்சம்பாக்கம் : ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களில், 1,216 பேருக்கு, முதல் கட்டமாக, கருத்து கேட்கும் படிவம் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 196வது வார்டுக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில், அரசுக்கு சொந்தமான கைவேலி இடம் 160 ஏக்கர் உள்ளது.இதை, உள்ளூர் அரசியல்வாதிகள் கபளீகரம் செய்து, சொற்ப விலைக்கு பொதுமக்களிடம் விற்பனை செய்துள்ளனர். தற்போது, 1,500க்கு மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு இடத்தில் வீடு கட்டி உள்ளனர்.அந்த இடத்தை மீட்கக் கோரி, ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது.

ஆக்கிரமிப்பாளர்களை துல்லியமாக கணக்கெடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. சோழிங்கநல்லுார் தாசில்தார் தலைமையில், 40 பேர் குழு, 'பயோமெட்ரிக்' முறையில் கணக்கெடுப்பு பணியை நடத்தினர்.ஆக்கிரமிப்பாளர்களுக்கு, இரண்டு நாட்களுக்கு முன் கருத்து கேட்பு படிவம் வழங்குவதாக இருந்தது. அத்தகவல் கிடைத்ததும், ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று கூடி மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தென்சென்னை மாவட்ட கோட்டாட்சியர் யோகஜோதி தலைமையில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு கருத்து கேட்பு படிவம் வழங்கும் பணி நேற்று நடந்தது. படிவத்தை ஏற்க மறுத்தவர்களின் வீட்டு சுவற்றில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டது. மொத்தம் 160 ஏக்கரில், முதல்கட்டமாக 51.32 ஏக்கரில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 1,216 வீடுகளுக்கு கருத்து கேட்கும் படிவம் வழங்கப்பட்டது. நோட்டீஸ் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 10க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர். அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X