சிகிச்சைக்கு வந்த சிறை கைதி ஓட்டம்; கழிப்பறைக்கு செல்வதாக கூறி நாடகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிகிச்சைக்கு வந்த சிறை கைதி ஓட்டம்; கழிப்பறைக்கு செல்வதாக கூறி நாடகம்

Added : செப் 25, 2021
Share
ராயபுரம் : -ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கைதி, கழிவறைக்குச் செல்வதாகக் கூறி நாடகமாடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான தனி வார்டு உள்ளது.இந்த வார்டில், பெண் கைதி ஒருவர் உட்பட 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு, ஆயுதப்படை சப்--இன்ஸ்பெக்டர், இரண்டு தலைமை காவலர்கள் உள்ளிட்ட, 16 பேர் பாதுகாப்பு

ராயபுரம் : -ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த கைதி, கழிவறைக்குச் செல்வதாகக் கூறி நாடகமாடி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான தனி வார்டு உள்ளது.இந்த வார்டில், பெண் கைதி ஒருவர் உட்பட 14 பேர் சிகிச்சையில் உள்ளனர். இங்கு, ஆயுதப்படை சப்--இன்ஸ்பெக்டர், இரண்டு தலைமை காவலர்கள் உள்ளிட்ட, 16 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இந்நிலையில், புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்து, வலிப்பு நோய் காரணமாக கடந்த 22ம் தேதி, சபி முகமது, 21, என்ற கைதியை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். நேற்று இவரை, சிறைக் கைதிகள் வார்டில் உள்நோயாளியாக அனுமதித்தனர்.அப்போது, புற நோயாளிகள் பிரிவுக்கு, சபி முகமதுவை அழைத்துச் சென்று சிகிச்சையளித்து, மீண்டும் அவர் இருந்த உள்நோயாளிகள் பிரிவுக்கு அழைத்து வந்தனர்.

அந்த நேரத்தில், கழிப்பறைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற சபி முகமது தப்பிவிட்டார்.வண்ணாரப்பேட்டை போலீசார் தேடி வந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து, வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த சபி அகமதுவை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X