காமராஜர் சாலையை கடக்க திணறும் மக்கள்

Added : செப் 25, 2021
Share
Advertisement
மெரினா : மெரினா, காமராஜர் சாலையில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.நேப்பியர் பாலம் -- கலங்கரை விளக்கம் வரையிலான காமராஜர் சாலையில், பொதுப்பணி துறை, குடிசை மாற்று வாரிய தலைமை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், சுற்றுலா தலமான மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லமும் உள்ளது.தினசரி அரசு

மெரினா : மெரினா, காமராஜர் சாலையில் உள்ள அரசு அலுவலக ஊழியர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணியரும் சாலையை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

நேப்பியர் பாலம் -- கலங்கரை விளக்கம் வரையிலான காமராஜர் சாலையில், பொதுப்பணி துறை, குடிசை மாற்று வாரிய தலைமை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், சுற்றுலா தலமான மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லமும் உள்ளது.தினசரி அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, சுற்றுலா தலங்களுக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருவோர், விபத்தில்லாமல் சாலையை கடப்பதற்கென, உழைப்பாளர் சிலை மற்றும் கண்ணகி சிலை ஆகிய இரண்டு இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.மொத்தம் 3.5 கி.மீ., நீளமுள்ள இச்சாலையில், இரண்டு இடங்களில் மட்டுமே சுரங்க நடைபாதை அமைத்துவிட்டு, மற்ற இடைப்பட்ட இடங்களில் பாதசாரிகள் கடவுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அங்கு போக்கு வரத்து போலீசார் யாரும் பணியமர்த்தப்படாததால், மிகுந்த அச்சத்துடன் மக்கள் சாலையை கடக்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X