விஷ ஜந்துக்கள் நடமாட்டம்; குடியிருப்பு வாசிகள் பீதி

Added : செப் 25, 2021
Share
Advertisement
ஐ.சி.எப் : காந்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதிஅடைந்துள்ளனர்.ஐ.சி.எப்., - நியூ ஆவடி சாலை காந்தி நகரில், குடிசை மாற்று வாரியத்தின் பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 'ஏ' பிளாக் முதல், 'எல்' பிளாக் வரை மொத்தம் 492 குடியிருப்புகள் உள்ளன. அதில், 2,000க்கும் மேற்பட்டோர்

ஐ.சி.எப் : காந்தி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதிஅடைந்துள்ளனர்.

ஐ.சி.எப்., - நியூ ஆவடி சாலை காந்தி நகரில், குடிசை மாற்று வாரியத்தின் பழைய அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 'ஏ' பிளாக் முதல், 'எல்' பிளாக் வரை மொத்தம் 492 குடியிருப்புகள் உள்ளன. அதில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இந்த குடியிருப்புகளின் பின்புறத்தில், சென்னை குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான பெரிய பரப்பிலான காலி மனை உள்ளது. போதிய பராமரிப்பில்லாத காரணத்தால், காலி மனை புதர் மண்டி காணப்படுகிறது.

இதில், கீரி, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலாவுகின்றன; அவ்வப்போது குடியிருப்புகளிலும் படையெடுக்கின்றன. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர்.இது குறித்து குடியிருப்பு மக்கள் கூறியதாவது:

குடியிருப்புகளின் பின்புறத்தில் உள்ள காலிமனையில் தடுப்புச் சுவர் இல்லை. இதனால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள்சர்வ சாதாரணமாக கீழ் தளங்களில் உள்ள வீடுகளில் புகுந்து விடுகின்றன.மழைக் காலங்களில் நிலைமை மேலும் மோசமாகிறது; சமூக விரோதி களின் கூடாரமாகவும் மாறி வருகிறது.இது குறித்து, மாநக ராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. எனவே, உயிர் பலி அசம்பாவிதம் ஏற்படும் முன், அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X