பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி பள்ளிகள் மறு சீரமைப்பு; ஆசிரியர் திறனை மேம்படுத்த பயிற்சி

Added : செப் 25, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சியில், 'சிட்டிஸ்' திட்டத்தின் கீழ் 28 பள்ளிகள், உலக தரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளன. இதில், ஆசிரியர்களின் கற்பிற்கும் திறனை மேம்படுத்த, பயிற்சி வகுப்புகள் நடத்தபட உள்ளன.சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளின் கட்டமைப்புகள் சமீபத்தில் சீரமைக்கப்பட்டன. இதற்கிடையே, 28 மாநகராட்சி பள்ளிகளை, 95.25 கோடி ரூபாய்

சென்னை : சென்னை மாநகராட்சியில், 'சிட்டிஸ்' திட்டத்தின் கீழ் 28 பள்ளிகள், உலக தரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளன. இதில், ஆசிரியர்களின் கற்பிற்கும் திறனை மேம்படுத்த, பயிற்சி வகுப்புகள் நடத்தபட உள்ளன.

சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளின் கட்டமைப்புகள் சமீபத்தில் சீரமைக்கப்பட்டன. இதற்கிடையே, 28 மாநகராட்சி பள்ளிகளை, 95.25 கோடி ரூபாய் செலவில், உலக தரத்திற்கு மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதற்காக, பிரான்ஸ் மேம்பாட்டு முகமை, 76.2 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறது. மீதமுள்ள தொகை, சென்னை 'ஸ்மார்ட் சிட்டி 'திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

இதன்படி, சென்னை மாநகரை புதுமையாகவும், ஒருங்கிணைந்த வகையிலும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, 'சிட்டிஸ்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், புதுவண்ணரப்பேட்டை, மணிகண்டன் தெருவில் உள்ள, மாநகராட்சி பள்ளி மற்றும் நெசப்பாக்கம் மாநகராட்சி பள்ளிகள், 7.5 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அடையாறு காந்திகிராமம் நடுநிலை பள்ளி, 2.06 கோடி ரூபாய்; ஷெனாய் நகர் சுப்பராயன் தெருவில் உள்ள, மேல்நிலை பள்ளி, 4 கோடி ரூபாய்; தண்டையார்பேட்டை நியூ மார்க்கெட் பகுதியில் உள்ள, உயர்நிலைப் பள்ளி, 5.13 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட உள்ளன.இது குறித்து, சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி கூறியதாவது:

சிட்டிஸ் திட்டத்தின் கீழ், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன் மேம்படுத்துதல், பள்ளி விளையாட்டு மைதானம் சீரமைத்தல் மற்றும் மாணவர்களுக்கு விளையாட்டு திறன் ஊக்குவித்தல், மேஜைகளை நவீனப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.இதே போல், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு பணிகளை மேற்கொள்ள உள்ளோம்.

தற்போது, குறைந்த எண்ணிக்கையிலான பள்ளிகளில் இத்திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. வருங்காலங்களில் 281 மாநகராட்சி பள்ளிகளும் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் நவீனப்படுத்தப்படும். தற்போது உள்ள டிஜிட்டல் தொழில்நுட்பங்களை எப்படி கையாள்வது என்பது குறித்து 2,000 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதில், 'ஆன்லைன்' வகுப்புகள் துவங்கி, ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் வரை அனைத்திற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர 600 ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு, மாணவர்களை ஓருங்கிணைத்தல், ஊக்குவித்தல், பிரச்னையை எதிர்கொள்வது, தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X