பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்டேட் தொழிலாளர் தினக்கூலி: இடைக்கால ஒப்பந்தம் இருக்காது

Added : செப் 25, 2021
Share
Advertisement
வால்பாறை:தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கூலி உயர்வு அறிவித்துள்ள நிலையில், இடைக்கால ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என, தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வு சட்டத்தின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி முதல், 425.40 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே, அரசு
 எஸ்டேட் தொழிலாளர் தினக்கூலி: இடைக்கால ஒப்பந்தம் இருக்காது

வால்பாறை:தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கூலி உயர்வு அறிவித்துள்ள நிலையில், இடைக்கால ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என, தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில், தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி உயர்வு சட்டத்தின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி முதல், 425.40 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதனிடையே, அரசு அறிவித்துள்ள சம்பளத்திற்கு குறைவாக இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தற்போது, தினக்கூலியாக, 395 ரூபாய் வழங்கப்படுகிறது.இந்நிலையில், வால்பாறையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், நிர்வாகிகள் கூட்டம் தலைவர் அமீது (ஏ.டி.பி.,) தலைமையில் நடந்தது. சவுந்திரபாண்டியன் (எல்.பி.எப்.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), உள்ளிட்ட, 17 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கூலி உயர்வு தொடர்பான அரசின் இறுதி உத்தரவு வெளியிடும் வரை, சம்பளம் தொடர்பான எந்த ஒரு ஒப்பந்தமும் ஏற்படுத்துவதில்லை, என, ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொழிற்சங்க தலைவர்கள் பேசும்போது, 'வால்பாறையில், தேயிலை தொழில் மிக முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில், தொழிலாளர் பற்றாக்குறையால், வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பல்வேறு எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகின்றனர்.வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தட்டி கேட்கவும், அவர்களை சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கவும், தொழிற்சங்க தலைவர்கள் கட்டாயம், ஹிந்தி படிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X