உடல் முழுக்க சிகரெட் சூடு; 2 வயது சிறுமிக்கு கொடுமை

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெலகாவி : பெலகாவி அருகே, 2 வயது சிறுமியின் உடல் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, தீக்காயங்களுடன் கரும்பு தோட்டத்தில் மயங்கி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி அதானி, ஹல்யாளா கிராமத்தின் கரும்பு தோட்டம் ஒன்றில் நேற்று முன் தினம் மாலை முனகல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்திற்கு சென்ற சிலர், கரும்பு தோட்டத்திற்குள் பார்த்த போது, 2 வயது சிறுமி, நிர்வாணமாக

பெலகாவி : பெலகாவி அருகே, 2 வயது சிறுமியின் உடல் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டு, தீக்காயங்களுடன் கரும்பு தோட்டத்தில் மயங்கி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி அதானி, ஹல்யாளா கிராமத்தின் கரும்பு தோட்டம் ஒன்றில் நேற்று முன் தினம் மாலை முனகல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த இடத்திற்கு சென்ற சிலர், கரும்பு தோட்டத்திற்குள் பார்த்த போது, 2 வயது சிறுமி, நிர்வாணமாக உடல் முழுவதும், சிகரெட்டால் சூடு வைத்த தீக்காயங்களுடன் சுயநினைவின்றி கிடப்பது தெரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், அடையாளம் தெரியாத அந்த சிறுமியை காப்பாற்றி அதானி மருத்துவமனையில் சிகிச்சையளித்து கூடுதல் சிகிச்சைக்காக பெலகாவி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.சிறுமியின் பெற்றோர் யார் என தெரியவில்லை. அவரை சித்ரவதை செய்ததும் யார் என தெரியவில்லை. போலீசார், மகளிர், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.அதானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X