பொது செய்தி

தமிழ்நாடு

நற்சிந்தனையோடு குழந்தையை பெற்றெடுக்கணும்: எம்.எல்.ஏ.,

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருத்தணி : ''நிறைமாத கர்ப்பிணிகள் நல்ல சிந்தனைகளோடு சந்தோஷத்துடன் குழந்தையை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சந்திரன் வாழ்த்தினார்.திருத்தணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 100 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, திருத்தணியில் நேற்று நடந்தது.மாவட்ட திட்ட

திருத்தணி : ''நிறைமாத கர்ப்பிணிகள் நல்ல சிந்தனைகளோடு சந்தோஷத்துடன் குழந்தையை பெற்றெடுத்து நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., சந்திரன் வாழ்த்தினார்.

திருத்தணி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் 100 கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, திருத்தணியில் நேற்று நடந்தது.மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, திருத்தணி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திவ்யஸ்ரீ பங்கேற்றனர்.திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று கர்ப்பிணிகளை வாழ்த்தி பேசியதாவது:

கருவிலிருக்கும் குழந்தைக்காக பெண்கள் பல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தி, தியாகம் செய்கின்றனர். கருவில் குழந்தை வளரும் போதே, நல்ல சிந்தனைகளோடு சந்தோஷமாக இருந்து, குழந்தையை பெற்றெடுத்து, நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.

தலைப்பிரசவம் என்பது இரு உயிர்களின் போராட்டம். குழந்தை பிறந்தவுடன் ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுத்தால் தான், குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக எம்.எல்.ஏ., சந்திரன் கர்ப்பிணிகளுக்கு வளையல், மலர் மாலை அணிவித்து வளைகாப்பு செய்தார். மதியம் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்தான உணவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X