பொது செய்தி

இந்தியா

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தம்; நெருக்கடிக்கு பணிந்து வாபஸ் ஆனது?

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி, செல்வாக்கு மிக்கவர்களின் நெருக்கடிக்கு பணிந்து திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.பெங்களூரின் பூபசந்திராவில் சர்வே எண் 17ல், 1 ஏக்கர் நிலத்தை லே -- அவுட் அமைப்பதற்காக, 1982ல் பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம் கையகப்படுத்தியிருந்தது.இது குறித்து நில

பெங்களூரு : பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தின் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி, செல்வாக்கு மிக்கவர்களின் நெருக்கடிக்கு பணிந்து திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பெங்களூரின் பூபசந்திராவில் சர்வே எண் 17ல், 1 ஏக்கர் நிலத்தை லே -- அவுட் அமைப்பதற்காக, 1982ல் பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம் கையகப்படுத்தியிருந்தது.இது குறித்து நில உரிமையாளர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் பி.டி.ஏ.,வுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது.இதையடுத்து பி.டி.ஏ., செயல் நிர்வாக பொறியாளர் குமார், போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை அங்கு வந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை பார்வையிட்டார்.

அப்போது, செல்வாக்கு மிக்க நபர்களிடமிருந்து, தொலைபேசி மூலம் நெருக்கடி வந்தது. எனினும், அதற்கு பணியாமல் பணிகள் நீடித்தன. 90 சதவீதம் பணிகள் முடிந்திருந்தன. இந்நிலையில், மிக உயரிய இடத்தில் இருந்து உத்தரவு வந்ததால், வேறு வழியின்றி அதிகாரிகள், பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.இதனால், பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான, 80 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்க முடியாமல் போனது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X