சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் கண்ணாடி உடைத்து வெளிநாட்டு கரன்சி திருட்டு

Added : செப் 25, 2021
Share
Advertisement
திருத்தணி : முருகன் மலைக்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து நகை, வெளிநாட்டு கரன்சிகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.சென்னை மாங்காடு வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் கலையரசன், 25. நேற்று முன்தினம் குடும்பத்தாருடன், காரில் சென்னையில் இருந்து திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.'பார்க்கிங்'

திருத்தணி : முருகன் மலைக்கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை பக்தரின் கார் கண்ணாடியை உடைத்து நகை, வெளிநாட்டு கரன்சிகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

சென்னை மாங்காடு வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் கலையரசன், 25. நேற்று முன்தினம் குடும்பத்தாருடன், காரில் சென்னையில் இருந்து திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வந்தார்.'பார்க்கிங்' பகுதியில் காரை நிறுத்தி மூலவரை தரிசிக்க சென்றனர். சுவாமி தரிசனம் முடித்து திரும்பி வந்த போது, மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்திருந்தது தெரிந்தது.காரில் வைத்திருந்த, 2 சவரன் தங்க நகை மற்றும் ஜப்பான், அமெரிக்கா நாட்டு கரன்சிகளை திருடிச்சென்றது தெரியவந்தது.கலையரசன் புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X