சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை முயற்சி: தாய் பலி பிள்ளைகள் மீட்பு

Added : செப் 25, 2021
Share
Advertisement
நகரி : திருவள்ளூர் மாவட்டம், பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன், 47. இவரது மனைவி புவனேஸ்வரி, 42. இவர்களுக்கு, மோகனாபிரியா, 21, மற்றும், 17 வயதான மற்றொரு மகள் என பிள்ளைகள்.சித்துார் மாவட்டம் விஜயபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கருணாகரன் தனியார் ஆங்கிலப் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.மோகனப்பிரியாவுக்கு திருமணம் செய்ய தீர்மானித்து,

நகரி : திருவள்ளூர் மாவட்டம், பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன், 47. இவரது மனைவி புவனேஸ்வரி, 42. இவர்களுக்கு, மோகனாபிரியா, 21, மற்றும், 17 வயதான மற்றொரு மகள் என பிள்ளைகள்.

சித்துார் மாவட்டம் விஜயபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கருணாகரன் தனியார் ஆங்கிலப் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.மோகனப்பிரியாவுக்கு திருமணம் செய்ய தீர்மானித்து, மாப்பிள்ளை தேடியும் கிடைக்காததால் தம்பதி கவலை அடைந்தனர்.

இந்நிலையில் தம்பதி, இரு மகள்களுடன் கோசலநகரம் அருகே ராமக்கம்மாள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.அங்கிருந்து வேனில் திரும்பும்போது, கேசவபுரம் சோதனை சாவடி அருகே வாகனத்தை நிறுத்தி, நால்வரும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து, விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தனர்.

அங்கிருந்தவர்கள் விரைந்து சென்று கிணற்றில் குதித்து புவனேஸ்வரியை தவிர மூன்று பேரை உயிருடன் மீட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புவனேஸ்வரி தண்ணீரில் மூழ்கி பலியானார். விஜயபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X