பொது செய்தி

இந்தியா

நந்தி மலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

Added : செப் 25, 2021
Share
Advertisement
சிக்கபல்லாபூர், : மாநில அரசு நிதி விடுவித்ததை தொடர்ந்து, நந்தி மலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24ல் பெய்த பலத்த மழையால் நந்தி மலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலைகள் சேதம் அடைந்தன. பாதுகாப்பு காரணத்தால் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் ஒரு மாதமாகியும் சாலைகள்

சிக்கபல்லாபூர், : மாநில அரசு நிதி விடுவித்ததை தொடர்ந்து, நந்தி மலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன.

சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 24ல் பெய்த பலத்த மழையால் நந்தி மலையில் மண் சரிவு ஏற்பட்டு, சாலைகள் சேதம் அடைந்தன. பாதுகாப்பு காரணத்தால் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் ஒரு மாதமாகியும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை பரிசீலனை செய்து 40 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகலம் அளவுக்கு சாலையை சீரமைக்க 80 லட்சம் ரூபாய் தேவை என அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. மாநில அரசு அறிக்கையை பரிசீலித்து, 80 லட்சம் ரூபாய் நிதியை செப்டம்பர் 17ல் ஒதுக்கியது.இதையடுத்து தற்போது சாலையை சீரமைக்கும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

சாலைகளை தரமாகவும், பாதிப்பு ஏற்படாத வகையிலும் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.ஒன்றரை மாதம் வரை பணிகள் நடக்க வாய்ப்புள்ளது. அதுவரை கற்றுலா பயணியருக்கு தடை நீட்டிப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X