போலீஸ் டைரி

Added : செப் 25, 2021
Share
Advertisement
போதை நபர் துாக்கிட்டு இறப்புதிருத்தணி: திருத்தணி தாலுகா, நெடும்பரம் அடுத்த பழைய பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்குமார், 60. நேற்று முன்தினம் இரவு, அளவுக்கு அதிகமாக மது குடித்து, வீட்டிற்கு வந்த வேல்குமார், போதையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.கணவனுக்கு

போதை நபர் துாக்கிட்டு இறப்பு

திருத்தணி: திருத்தணி தாலுகா, நெடும்பரம் அடுத்த பழைய பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்குமார், 60. நேற்று முன்தினம் இரவு, அளவுக்கு அதிகமாக மது குடித்து, வீட்டிற்கு வந்த வேல்குமார், போதையில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கணவனுக்கு 'காப்பு'

திருத்தணி: திருத்தணி சுவால்பேட்டை முதல் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சுரேஷ், 32. இவரது மனைவி பெனசீர்பானு, 27. சுரேஷ், வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், மனைவியை உருட்டை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். பலத்த காயமடைந்த பெனசீர்பானு, சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, சுரேஷை கைது செய்தனர்.

அரசுக்கு எதிராக பேசியவர் கைது

மப்பேடு: பேரம்பாக்கம் பஸ் நிலையம் செல்லும் நெடுஞ்சாலையில், மப்பேடு உதவி ஆய்வாளர் இளங்கோ தலைமையில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணி செய்தனர்.அப்போது, அப்பகுதி மேல்நிலைப் பள்ளி நுழைவாயில் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர், சாலையில் செல்வோரை ஆபாசமாகவும், அரசுக்கு எதிராகவும் பேசிக்கொண்டிருந்தார். உதவி ஆய்வாளர் அவரை பிடித்த விசாரித்ததில், பேரம்பாக்கம் காந்தி நகரைச் சேர்ந்த ரபீக்பாஷா, 38, என்பது தெரிய வந்தது. மப்பேடு போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கணவர் மாயம்: மனைவி புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பட்டரைபெரும்புதுாரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அருளரசன், 25; போளிவாக்கம் தனியார் நிறுவன ஊழியர். கடந்த 22ம் தேதி வேலைக்குச் சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது மனைவி சக்காரியா, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், காணாமல் போன கணவரைத் தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

உத்திரமேரூர்: சாலவாக்கம் அடுத்த காவித்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகள் திவ்யா, 28, திருமணமான இவர், தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று பகல் 12:30 மணியளவில் திவ்யா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, பின்பக்க கதவு வழியாக வந்த, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் வீடு புகுந்தனர்.திவ்யாவின் கை, கால்களை கட்டி போட்டு, கத்தியை காட்டி மிரட்டி 5 சவரன் தங்கச் சங்கிலி, 4 சவரன் தாலிச்சரடு, 3 கிராம் தங்கக் கம்மல் ஆகிய வற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செம்மரம் கடத்திய ஐவர் கைது

நகரி: சித்துார் மாவட்டம் கே.வி.பி.புரம் அடுத்த காட்டுப்பகுதியில், காரில் செம்மரம் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கே.வி.பி.புரம் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தபோது, காரில் பதுக்கி வைத்திருந்த 76 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, பிச்சாட்டூர் பகுதி மோகன்பாபு, பிரகாஷ், டில்லிபாபு, அருண்குமார், ஆறுமுகம் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X