பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுகள் மாயம்: ஆக்கிரமிப்பால் அடையாளம் இழந்த பாலாறு: நீர் வழித்தடங்களை மீட்க தேவை நடவடிக்கை

Updated : செப் 25, 2021 | Added : செப் 25, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
உடுமலை; உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்புகளால், அடையாளத்தை இழந்து வருகின்றன. அவற்றை மீட்டு, மழைக்காலங்களில் நீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி, திருமூர்த்திமலையிலிருந்து மேற்கு நோக்கி, 60 கி.மீ., துாரம் பாலாறு பயணிக்கிறது.அதன் துணை ஆறாக, நல்லாறு
ஆறுகள் மாயம்: ஆக்கிரமிப்பால் அடையாளம் இழந்த பாலாறு:  நீர் வழித்தடங்களை மீட்க தேவை நடவடிக்கை

உடுமலை; உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து மேற்கு நோக்கி பாயும் பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்புகளால், அடையாளத்தை இழந்து வருகின்றன. அவற்றை மீட்டு, மழைக்காலங்களில் நீர் வீணாவதை தடுக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.

உடுமலை அருகே, மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி, திருமூர்த்திமலையிலிருந்து மேற்கு நோக்கி, 60 கி.மீ., துாரம் பாலாறு பயணிக்கிறது.அதன் துணை ஆறாக, நல்லாறு மற்றும் ஓடை, சிற்றாறுகள் பாலாற்றில் இணைகிறது.பசுமை சூழ் மலைகள், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு மத்தியில், பாலாறு ஓடுவதால், விவசாயம் மற்றும் குடிநீருக்கான நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் உள்ளது.ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதியும் பெற்று வந்தன.

திருமூர்த்தி அணை கட்டப்பட்டது, பி.ஏ.பி., திட்டம், காண்டூர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களினால், பாலாறு, நல்லாற்றில் நீர் வரத்து குறைந்தாலும், பருவ மழை காலங்களில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.பல இடங்களில், ஆக்கிரமிப்புகளால் ஆறு குறுகியுள்ளது. தென்னை மரங்கள், சொகுசு விடுதிகள் என ஆற்றின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், மரங்கள், நாணல் என புதர் மண்டியும், நீர் வழித்தடம், சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் சீமைக்கருவேலன் காடாக மாறியுள்ளது.


latest tamil news


பல இடங்களில் ஆற்றிலிருந்து நேரடியாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட கரைப்பகுதிகளில் மணல் திருட்டும் அதிகளவு நடப்பதால், பாலாறு, நல்லாறு மற்றும் துணை ஓடைகள் அடையாளத்தை இழந்து வருகின்றன. மழை வெள்ள நீரும், ஒரு சில நாட்களில் மேற்கு நோக்கி பாய்ந்து, வீணாகிறது.இதனால், வழியோரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது. இரு புறமும் உள்ள விவசாய நிலங்களின், கிணறு, போர்வெல்களின் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்குச்சென்று, பசுமை பகுதியும் வறட்சிப்பகுதியாக மாறி வருகிறது.எனவே, அழிந்து வரும், பாலாறு, நல்லாறு மற்றும் ஓடைகளை மீட்க, விரிவாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, இயற்கை நீர் வழித்தடங்களை மீட்க வேண்டும்.

மழை நீரை, முறையாக பயன்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில், ஆறு மற்றும் ஓடைகளின் குறுக்கே, தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும்.தற்போது, வட கிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், மழை வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையிலும், நீர் வழித்தடங்களிலுள்ள, சீமைக்கருவேலன் மரங்கள், முட்புதர்களை அகற்ற வேண்டும்.கண்டுகொள்வதில்லைவிவசாயிகள் கூறியதாவது:பாலாறு, நல்லாறு ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும், என பல முறை மனு அளித்தும், கலெக்டர் குறை தீர்க்கும் கூட்டங்களில் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

ஆறு ஆண்டுக்கு முன், அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டு, அகற்ற வேண்டிய தென்னை மரங்கள், கட்டடங்கள் அடையாளமிடப்பட்டன. ஆனால், இதுவரை அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளும் தொடர்ந்து அதிகரித்து, பல இடங்களில் ஆறு காணாமல் போயுள்ளது. நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, நீதிமன்ற உத்தரவுகள், அரசு உத்தரவுகள் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக, ஆறு, ஓடைகள் மாயமாகி, இயற்கை அழிக்கப்படுகிறது. வெள்ள பாதிப்பு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு என பல சிக்கல்களும் ஏற்படுகிறது.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-செப்-202117:33:25 IST Report Abuse
RajanRajan இந்த திமுக ஆட்சிலே ஆறுகளும் பாலைவனமாகும் இந்து கோவில்களும் அழிக்கப்படும். ஏன்னா இது இன்னொரு வகை திராவிட தலிபான்களின் ஆட்சி. அங்கேயாச்சும் அவன் கை தலைன்னு பார்த்து பார்த்து வெட்டுவன். இங்கே இவன் எதை வெட்டுவான் என்பதே தெரியாது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-செப்-202117:27:57 IST Report Abuse
r.sundaram கழகங்களுக்கு நன்றி சொல்லுவோம். வேறு என்ன சொல்ல, வயிறு எரிகிறது.
Rate this:
Cancel
25-செப்-202117:01:25 IST Report Abuse
அருணா வடிவேலு சொனதுபபோல் கிணறு மட்டுமா நீர் நிலைகள் காணோம் இனி சாராய ஊற்றுக்கள் வர ஏற்பாடு கள் தொடரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X