பொது செய்தி

இந்தியா

கர்நாடக சட்டசபையில் பேசிய லோக்சபா சபாநாயகர்

Added : செப் 25, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''மக்களுக்கு பாரபட்சமற்ற ஆட்சியை வழங்க வேண்டும். உறுப்பினர்கள், கூடுதல் அறிவு, நேர்மை, பொறுப்புடன் செயல்பட வேண்டும். சட்டங்கள் உருவாக்கும் போது அதன் மீது நடக்கும் விவாதங்களில், உறுப்பினர்கள் பங்கேற்காதது கவலை அளிக்கிறது. ஒவ்வொருவரும் ஜனநாயக மாண்புகளை காத்து கடைப்பிடிக்க வேண்டும்,'' என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.நம் நாட்டின் 75ம்
கர்நாடக சட்டசபையில் பேசிய லோக்சபா சபாநாயகர்

பெங்களூரு : ''மக்களுக்கு பாரபட்சமற்ற ஆட்சியை வழங்க வேண்டும். உறுப்பினர்கள், கூடுதல் அறிவு, நேர்மை, பொறுப்புடன் செயல்பட வேண்டும். சட்டங்கள் உருவாக்கும் போது அதன் மீது நடக்கும் விவாதங்களில், உறுப்பினர்கள் பங்கேற்காதது கவலை அளிக்கிறது. ஒவ்வொருவரும் ஜனநாயக மாண்புகளை காத்து கடைப்பிடிக்க வேண்டும்,'' என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்தார்.

நம் நாட்டின் 75ம் சுதந்திர ஆண்டை ஒட்டி, கர்நாடக சட்டசபையில் ஜனநாயக மாண்பை காப்பது குறித்து சிறப்புரையாற்ற, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று மதியம் பெங்களூரு விதான் சவுதாவுக்கு அவர் வந்தார். எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்.


ஜனநாயகத்தின் அடையாளம்


பின், சட்டசபை, சட்ட மேலவை கூட்டு கூட்டத்தொடரில் ஓம் பிர்லா பேசியதாவது: கர்நாடகாவின் தலைமை செயலகமான விதான் சவுதா கட்டடம், ஜனநாயகத்தின் சிறப்பு அடையாளமாக உள்ளது. மக்களின் விருப்பங்களையும், அதை நிறைவேற்றியதையும் விளக்குகின்றன.உள்நாடு மட்டுமின்றி பல வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணியரை வெகுவாக ஈர்த்து, நம் ஜனநாயக மாண்பை பின்பற்றும் வகையில் ஊக்கப்படுத்துகிறது.

கர்நாடகா செல்வ செழிப்புமிக்க மற்றும் சிறந்த வரலாறு கொண்டுள்ளது. பசவண்ணர், 12ம் நுாற்றாண்டிலேயே அனுபவ மண்டபத்தை அமைத்து, முதல் ஜனநாயக முறையிலான கூட்டத்தொடரை நடத்தி நமக்கு வழி காட்டியுள்ளார்.கடந்த 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில் ஜனநாயக மாண்புகளை காத்துள்ளோமா என்று யோசித்து பார்க்க வேண்டும்.

ஆட்சி மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.நம் ஜனநாயக நடைமுறை, எப்போதும் மக்களை மையமாக கொண்டே இருக்கும். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், மக்கள் நலன் இருக்கும்.நாட்டில் இதுவரை 17 பொது தேர்தல்கள், 300க்கும் அதிகமான வெவ்வேறு சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றுகின்றனர். அதனால் தான் தேர்தல் முடிவுக்கு பின், ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் நடக்கிறது.

ஜனநாயக முறையை மேலும் எப்படி மக்கள் நலன் கொண்டவையாக மாற்ற முடியும் என்பதை பரிசீலிக்க வேண்டும். மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்த வேண்டும்.நாட்டுக்காக கொள்கைகள், சட்டங்கள் உருவாக்குவது சட்டசபை, பார்லிமென்டின் பொறுப்பு. நல்ல முறையில் விவாதங்கள் நடக்க வேண்டும். மக்கள் பிரச்னைகள் தீர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.


நேர்மை, பொறுப்பு


உறுப்பினர்கள் அனைவரும் ஜனநாயக தத்துவங்கள் மற்றும் மாண்பை நேர்மையுடன் கடைப்பிடித்து, மக்களுக்கு பாரபட்சமற்ற ஆட்சியை வழங்க வேண்டும். உறுப்பினர்கள், கூடுதல் அறிவு, நேர்மை, பொறுப்புடன் செயல்பட வேண்டும்.சட்டங்கள் உருவாக்கும் போது அதன் மீது விரிவாக விவாதிக்க வேண்டும். ஆனால், தேவையான அளவுக்கு விவாதங்கள் நடப்பதில்லை. விவாதங்களில் உறுப்பினர்கள் பங்கேற்காதது கவலை அளிக்கிறது.

மக்கள் பிரதிநிதிகள் எப்போதும், மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள்; அவர்களின் விருப்பங்களையும், பிரச்னைகளையும் தீர்ப்பவர்கள். எனவே, விவாதங்களில் பங்கேற்பது அவசியம். சபையின் காலத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மூன்று மாநாடுகள்விவாதங்களில் பங்கேற்பது தொடர்பாக, 1992, 1997, 2001 ஆகிய ஆண்டுகளில் மாநாடுகள் நடந்தன. சபாநாயகர், ஆளுங்கட்சி தலைவர், எதிர்க்கட்சி தலைவர், மூத்த உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

மக்கள் பிரதிநிதிகள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். ஜனநாயக நடைமுறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சபையிலும், பொது இடத்திலும் செயல்படக் கூடாது.ஜனநாயக அமைப்புகள் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கும், அபிவிருத்திக்கும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அப்போது தான், மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, லோக்சபா சபாநாயகர் ஒருவர் சட்டசபையில் பேசியது இதுவே முதல் முறை.


காங்., புறக்கணிப்பு: ம.ஜ.த., ஆஜர்


சட்டசபையில் ஜனாதிபதி, கவர்னர் ஆகியோர் மட்டுமே பேசி வருவது மரபு. பா.ஜ.,வினர் மரபை மீறி, லோக்சபா சபாநாயகரை பேச வைப்பது சரியில்லை. ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறி, நிகழ்ச்சியில் பங்கேற்காமல் காங்கிரசார் புறக்கணித்தனர்; மதிய உணவையும் புறக்கணித்தனர். ம.ஜ.த.,வினர் பங்கேற்றனர்.

ஜனநாயக மாண்பை காப்பதில் நாம் அக்கறை செலுத்த வேண்டும். மகளிர் மீது நடக்கும் கூட்டு பாலியல் பலாத்கார குற்றங்களை நாம் நினைத்தால் தடுக்க முடியும். அனைவரும் ஒன்று சேர்ந்து, நம் கடமையை நேர்மையாக செய்ய வேண்டும்.

- பசவராஜ் ஹொரட்டி, தலைவர், கர்நாடக மேலவை

மைசூரு அரச வம்சத்தினர் சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவது குறித்து நமக்கு கற்று தந்துள்ளனர். அரசியல் மாண்பு, ஜனநாயக மாண்பு, சுயசார்பு மாண்பு என வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. ஆனால், ஜனநாயக மாண்பு தான் சவாலானது. அதை நாம் கடைப்பிடித்து காக்க வேண்டும்.

- விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி, சபாநாயகர், கர்நாடக சட்டசபை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X